ஆபத்தில் உதவிய ரஜினிகாந்த்.! 1500 பேருக்கு அத்தியாவசிய பொருளுதவி.!! இயக்குனர்கள் சங்கம் பாராட்டு
நடிகர் ரஜினிகாந்த் கேட்காமலேயே அத்தியாவசிய பொருளுதவி செய்த காரணத்திற்காக இயக்குனர்கள் சங்கம் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. சமூக பரவலாக மாறக்கூடாது என்பதால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. சினிமா படப்பிடிப்புகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் அதில் பணிபுரியும் உறுப்பினர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக கடந்த மாதம் பெஃப்சியில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உதவுமாறு அதன் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் வைத்திருந்தார். இதையடுத்து பலரும் உதவி புரிந்தனர். அப்போது நடிகர் ரஜினியும் 50 லட்சம் உதவி வழங்கினார். ஆனால் தமிழக முதல்வர் நிதிக்கும், பிரதமர் நிவாரண நிதிக்கும் நிதியுதவி வழங்கவில்லை.
இந்நிலையில் பெஃப்சி தொழிலாளர்கள் 1500 பேருக்கு 10 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டைகள் மற்றும் 6 கிலோ எடை கொண்ட அத்தியாவசிய பொருட்கள் உட்பட வழங்கினர்.
இதற்காக ரஜினியை பாராட்டி இயக்குனர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது;
இன்றைய ஆபத்தான கொரோனா பாதிப்பில் வேலையின்றி வீட்டில் இருக்கும் சினிமா ஊழியர்கள், இயக்குனர்களின் கலை குடும்ப உறுப்பினர்களுக்கு நீங்கள் அனுப்பிவைத்த நிவாரண பொருட்களை கிடைக்கப் பெற்றோம். கேட்காமலேயே சகோதர கலைக் குடும்பத்திற்கு வாரிக்கொடுத்த உங்கள் கொடையுள்ளத்தை பாராட்ட வாத்தைகள் இல்லை. போற்றுகிறோம். தங்கள் நலமும் புகழும் உயரட்டும், குடும்பம் நீடூழி வாழட்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.