மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இதை மட்டும் 1 கிளாஸ் குடிங்க போதும்!! நம் முப்பாட்டன் வைத்தியம்!!

0
111
#image_title

மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இதை மட்டும் 1 கிளாஸ் குடிங்க போதும்!! நம் முப்பாட்டன் வைத்தியம்!!

ஆரோக்கியமற்ற உணவு முறையால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வரும் நமக்கு பெரும் சவாலாக இருப்பது மூட்டு வலி.இந்த மூட்டு வலி வந்து விட்டால் எந்த ஒரு வேலையும் நமக்கு மிகவும் கடினமாக மாறி விடும்.உடல் எடை ஆரோக்கியமற்ற வாழ்க்கை,முதுமை உள்ளிட்ட காரணங்களால் எலும்பு தேய்மானம்,மூட்டுகளுக்கு இடையே உள்ள ஜவ்வு பாதிப்பு,மூட்டு வீக்கம் உள்ளிட்டவை ஏற்படுகிறது.இதனை இயற்கை முறையில் 3 பொருட்களை பயன்படுத்தி விரைவில் சரி செய்து விட முடியும்.

தேவையான பொருட்கள்:-

*பிரியாணி இலை – 4

*வெந்தயப் பொடி – 1 ஸ்பூன்

*சோம்பு – 1 ஸ்பூன்

*நாட்டு சர்க்கரை – 1 ஸ்பூன்

செய்முறை:-

1.அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

2.அதில் பிரியாணி இலைகளை கிள்ளி போடவும்.

3.அதன் பின் பெருஞ்சீரகம்(சோம்பு) 1 ஸ்பூன் மற்றும் வெந்தயப் பொடி 1 ஸ்பூன் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.

4.பின்னர் அதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் 1 ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்கி பருகவும்.

மற்றொரு முறை:-

தேவையான பொருட்கள்:-

*சோம்பு – 1 ஸ்பூன்

*ஏலக்காய் – ஒன்று

*வெல்லம் – 1 ஸ்பூன்

செய்முறை:-

1.அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

2.பிறகு அதில் 1 ஏலக்காய் மற்றும் சோம்பு 1 ஸ்பூன் சேர்த்து கொதிக்க விடவும்.5 நிமிடங்களுக்கு பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

3.பின்னர் அதனை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் 1 ஸ்பூன் வெல்லம் சேர்த்து கலக்கி பருகவும்.இவ்வாறு தொடர்ந்து செய்தால் மூட்டு வலி,மலசிக்கல் பாதிப்பு,கண் குறைபாடு அனைத்தும் சரியாகி விடும்.

Previous articleஇட்லி பொடி எப்படி செய்யறதுன்னு தெரியலையா? கவலையை விடுங்க! உங்களுக்கான செய்முறை விளக்கம் இதோ!!
Next articleசளியை முழுமையாக கரைத்து வெளியேற்றும் அற்புத மூலிகை ரசம் – செய்வது எப்படி?