கடலோர மாவட்டங்களில் ஒருகோடி பனைமரங்கள் நடவு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்!!

0
115
#image_title

கடலோர மாவட்டங்களில் ஒருகோடி பனைமரங்கள் நடவு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்!!

தமிழகத்தின் மாநிலமரமான பனை அளப்பரிய பயன்களைக்கொண்டது.நிலத்தடிநீரின் காவலன் என்றே பனையினை கூறலாம்.ஆனால் கடந்த சில வருடங்களாக பனையின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.15 இலட்சமாக இருந்த பனைமர எண்ணிக்கை  5 இலட்சமாக குறைந்துள்ளது.

இதனால் வருத்தம் அடைந்த பனை ஆர்வலர்கள் பனைமரங்களை காக்க முடிவெடுத்து இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்துள்ளனர்.தமிழக பனை மரத்தொழிலாளர் நலவாரிய  “கிரீன் நீடா” சுற்றுச்சூழல் அமைப்பு, என்.எஸ்.எஸ். தமிழ்நாடு பசுமை இயக்கம் போன்றவை இணைந்து வரும் அக்டோபர் 1ம் தேதி  14 கடலோர மாவட்டங்களில் ஒருகோடி பனைமர விதைப்பு நிகழ்வு நடத்தவிருக்கிறது.

இந்நிகழ்வை நாளை காலை 10:30 மணிக்கு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைக்கிறார்.

பனைமர தொழிலாளர் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறியது:

தமிழகத்தில் பனைமரத்தின் எண்ணிக்கை கவலைக்கிடமான நிலையில் குறைந்துள்ளது.சில வருடங்களுக்கு முன்பு கூட 15 இலட்சம் எண்ணிக்கையில் இருந்த பனைமரங்கள் தற்போது 5 இலட்சம் எண்ணிக்கையில் குறைந்துள்ளது.இதன்காரணமாக  கடல் அரிப்பு, நிலத்தடி நீர்மட்டம் குறைவு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன.

இதன்காரணமாக  திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற  14 கடலோர மாவட்டங்களில், 1,076 கி.மீ., பரப்பளவில், ஒரு கோடி பனை வித்துக்களை நடவு செய்யும்  பணி வரும் அக்டோபர்  1-ந் தேதி தொடங்குகிறோம் எனவும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகபட்சம் 22 இலட்சம் பனைமர வித்துக்களை நடவு செய்யவுள்ளதாக கூறினார்.இந்நிகழ்வில் என். எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் “கிரீன் நீடா” அமைப்பும் இந்நிகழ்வில் உதவுமென்றும் கூறினார்.

Previous articleகாவிரி நீர் மேலாண்மை அவசர கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது!!
Next article“லியோ” படத்தின் செகண்ட் டிராக் “பாட்ஆஷ்” வெளியீடு!குதூகலத்தில் தளபதி ரசிகர்கள்!!!