“லியோ” படத்தின் செகண்ட் டிராக் “பாட்ஆஷ்” வெளியீடு!குதூகலத்தில் தளபதி ரசிகர்கள்!!!

0
22
#image_title

“லியோ” படத்தின் செகண்ட் டிராக் “பாட்ஆஷ்” வெளியீடு!குதூகலத்தில் தளபதி ரசிகர்கள்!!!

தளபதி விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில்,அனிருத் இசையமைத்து வெளிவரவிருக்கும்”லியோ”திரைப்படம் ஆக்சன் கலந்த த்ரில்லர் திரைப்படமாகும்.இத்திரைப்படம் அக்டோபர் 19 அன்று திரைக்கு வரவிருக்கிறது.இப்படத்தில் முன்னனி நடிகர் நடிகைகளாக விஜய்,த்ரிஷா,சஞ்சய் தத்,இயக்குனர் மிஸ்கின்,கெளதம் மேனன் போன்றோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல் பாடலான ”நான் ரெடிதான்”  பாடல் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் நிலையில் இப்படத்தின் அடுத்த பாடலான”பாட் ஆஷ்” பாடல் நேற்று செப்டம்பர்(28) வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.இப்பாடல்  விஷ்ணு எடவன் எழுதி,அனிரூத் அவர்கள் பாடியுள்ளார்.இந்த பாடல் வரிகளானது இவ்வாறு ஆரம்பிக்கிறது.

“இவன் இறங்குனா காட்டுக்கே விருந்து இவன் வேட்டைக்கு சிதறனும் பயந்து பெரும்புள்ளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி எழுதி”

கேட்கும்போதே படம் எப்படியிருக்குமோ என்ற ஆர்வத்தை அதிகபடுத்திக்கொண்டே போகிறது இப்பாடல்.

author avatar
Soppana