5 ரூபாய் செலவு செய்தால் போதும் வெறும் 2 நிமிடத்தில் நாள்பட்ட கழுத்து கருமையை நீக்கிவிடலாம்!! அனுபவ உண்மை!
பெரும்பாலானோருக்கு கழுத்து பகுதியில் அடர் கருமை படிந்திருக்கும்.கழுத்து பகுதிகளில் தோல் மடிப்புகள் இருந்தால் அங்கு அதிகப்படியான அழுக்குகள் சேர்ந்து நாளடைவில் அப்பகுதி கருமை நிறமாக மாறி விடுகிறது.இதற்கு முக்கிய காரணம் அந்த இடத்தில் அதிகப்படியான வியர்வை மற்றும் எண்ணெய் பசை ஏற்படுவது தான்.இதற்கு ரசாயனப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு இயற்கையான முறையில் தீர்வு காண முயற்சி செய்யுங்கள்.நல்ல பலன் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
*காபி தூள் – 1 1/2 தேக்கரண்டி
*எலுமிச்சை சாறு – 3 தேக்கரண்டி
செய்முறை:-
1.ஒரு சிறிய பவுலில் 1 1/2 தேக்கரண்டி காபி தூள் சேர்த்து கொள்ள வேண்டும்.
2.அதில் மூன்று தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கி கழுத்து பகுதியில்
காணப்படும் கருமையின் மேல் பூச வேண்டும்.
3.காலை,இரவு என்று எந்த நேரங்களிலும் இந்த ரெமிடியை பயன்படுத்தலாம்.இந்த கலவையில் உள்ள 2 பொருட்களும் வாசனை நிறைந்தவை என்பதால் கருமையை நீக்குவதோடு நல்ல மணத்தையும் கொடுக்கும்.
கழுத்து கருப்பு நீங்க வேறு வழிகள்:-
*ஒரு பவுலில் கற்றாழை ஜெல் மற்றும் சர்க்கரை 1 ஸ்பூன் சேர்த்து கழுத்து பகுதியில் தேய்த்து வருவதன் மூலம் அடர் கருப்பு நீங்கும்.
*சந்தனக்கட்டி 3 மற்றும் ரோஸ் வாட்டர் 2 ஸ்பூன் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கழுத்து பகுதியில்
காணப்படும் கருமையின் மேல் பூச வேண்டும்.இப்படி செய்தாலும் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.