முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஸ்பிரே எவ்வாறு செய்வது!!? அதற்கு இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!!!

0
137
#image_title
முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஸ்பிரே எவ்வாறு செய்வது!!? அதற்கு இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!!
முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு அருமையான ஸ்பிரே ஒன்றை ஒரே ஒரு பொருளை வைத்து எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பெண்கள் அனைவருக்கும் இந்த பதிவு ரெம்ப உதவியாக இருக்கும். முடி உதிர்தல், முடி வளர்ச்சி குறைவாக இருக்கும் பெண்கள், மேலும் பல வகையான தலைமுடி தொடர்பான பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் வைத்திய முறை நல்ல தீர்வு அளிக்கும்.
முடி வளர்ச்சியை தூண்டுவதற்கு நாம் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் பலவகையான மருந்துகளை பயன்படுத்தி வருவோம். ஆனால் அது பலன் தந்திருக்குமா என்பது புரியாத புதிராக இருக்கும். அவர்கள் அனைவருக்கும் இந்த பதிவில் எளிமையான ஸ்பிரே ஒன்றை தயாரித்து பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
முடி வளர்ச்சியை தூண்டுவதற்கு காய்ந்த ரோஸ்மேரி உதவியாக இருக்கும். ரோஸ்மேரி இலைகளில் அதிகளவு ஆன்டிஆக்சிடன்ட் சத்துக்கள் உள்ளது. இது முடி வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை தருகின்றது. இந்த ரோஸ்மேரி இலையை கொண்டு ஸ்பிரே தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
ரோஸ்மேரி இலையை கொண்டு ஸ்பிரே தயாரிப்பது எப்படி?
* முதலில் ரோஸ்மேரி இலைகளை எடுத்து காயவைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் நாட்டுமருந்து கடைகளில் காய்ந்த ரோஸ்மேரி இலைகள் கிடைத்தால் வாங்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரம் வைத்து அதில் முக்கால் வாசி டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* தண்ணீர் முதல் கொதி வரத் தொடங்கியவுடன் காய்ந்த ரோஸ்மேரி இலைகளை அதில் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நிறம் மாறும் வரை குதிக்க வைக்க வேண்டும். நிறம் மாறிய பின்னர் இறக்கி அதை ஆற வைக்க வேண்டும். ஆறிய பின்னர் இதை ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஸ்பிரே தயார். இதை எவ்வாறு பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.
இந்த ஸ்பிரோவை பயன்படுத்தும் முறை!!!
* இந்த ஸ்பிரேவை தலையில் ஸ்கால்பில் படும் படி ஸ்பிரே செய்ய வேண்டும்.
* பத்து நிமிடங்கள் ஊறிய பின்னர் ஷாம்பு பயன்படுத்தி தலையை அலச வேண்டும்.
* வாரத்திற்கு ஒரு முறை என்று மாதம் 4 முறை இதை செய்து வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். ஆனால் இதற்கு நல்ல டயட் மற்றும் உடற்பயிற்சி அவசியம் ஆகும்.
Previous articleகன்னத்திலும் முகத்திலும் ஏற்படும் மங்கு!!! இந்த பிரச்சனையை தீர்க்க இந்த ஒரு பொருள் போதும்!!!
Next articleதலைமுடியை மளமளவென வளர வைக்கும் அற்புத “மூலிகை எண்ணெய்” – தயார் செய்வது எப்படி?