பாலாடையில் இருந்து வாசனை மிகுந்த நெய் தயாரிக்கும் முறை!! இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்!!

0
102
#image_title

பாலாடையில் இருந்து வாசனை மிகுந்த நெய் தயாரிக்கும் முறை!! இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்!!

உணவில் சுவையை கூட்டும் முக்கிய பொருள்களில் ஒன்று நெய்.இதில் வைட்டமின் ஏ,டி,இ,கே அதிகளவில் இருக்கிறது.இந்த நெய் உடல் மற்றும் மன நலத்திற்கு நல்ல பலனைக் கொடுக்கும்.இவை உடலில் இருக்கின்ற கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும்,தசைகளை வலுவாக்கவும்,கண் பார்வையை அதிகரிக்கவும் உதவுகிறது.அதேபோல் மூளையின் செயல்பாடு மற்றும் செரிமானத்தை ஊக்குவிப்பதோடு ரத்த சுழற்சியையும் மேம்படுத்த உதவுகிறது. செரிமான பாதிப்பை நீக்குவதில் நெய்க்கு முக்கிய பங்கு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*பால் ஆடை – 1 பெரிய பவுல்

*உறை மோர் – சிறிதளவு

*ஐஸ் க்யூப் – 10

*முருங்கை கீரை – 1 கொத்து

செய்முறை:-

1)தினமும் பால் காய்ச்சிய பின் உருவாகும் பாலாடைகளை ஒரு டப்பாவில் சேமித்து பிரிட்ஜில் வைக்கவும்.

2)பாலாடை சேமித்து வைத்துள்ள டப்பா நிரம்பியதும் அதில் உறை மோர் சிறிதளவு சேர்த்து 5 மணி நேரம் பிரிட்ஜில் இருந்து எடுத்து வெளியே வைக்கவும்.

3)பின்னர் மீண்டும் அந்த பாலாடை டப்பாவை பிரிட்ஜில் வைக்கவும்.பின்னர் குளிர்ந்து வந்ததும் அதை வெளியே எடுத்து அதில் ஐஸ்க்யூப் சேர்த்து கொள்ளவும்.

4)பின்னர் இந்த பாலாடையை மிக்ஸி ஜாரில் போட்டு வெண்ணை தனியாக திரண்டு வரும் வரை அடித்து கொள்ளவும்.

5)பின்னர் அந்த வெண்ணெயை ஒரு சுத்தமான தண்ணீரில் போட்டு கழுவி கொள்ளவும்.

6)அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தயார் செய்து வெண்ணையை சேர்த்து உருக்க வேண்டும்.

7)அவை நன்கு உருகி நெய் பதத்திற்கு வந்ததும் அதில் ஒரு கொத்து முருங்கை கீரையை சேர்த்து பொரிய விடவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.நெய் நன்கு ஆறியதும் அதை ஒரு பாட்டிலில் வடிகட்டி சேமித்து வைத்து கொள்ளவும்.

குறிப்பு:-

இந்த நெய்யை சூரிய ஒளி இல்லாத இடத்தில் வைப்பது அவசியம்.இதை அடிக்கடி பயன்படுத்துவதாக இருந்தால், குளிர்சாதன பெட்டியில் வைப்பதை தவிர்க்கவும்.
இந்த நெய்யை சுத்தமான பாட்டிலில் காற்று புகாதவாறு அடைத்து வைத்தால் மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

Previous articleஉடைத்து ஊற்றிய முட்டை குழம்பு செம்ம டேஸ்டாக செய்ய வேண்டுமா? அப்போ இந்த முறையை ட்ரை பண்ணி பாருங்க!!
Next articleசிறுநீரக கல்லை கரைத்து வெளியேற்றும் வாழைத்தண்டு சூப் – சுவையாக செய்வது எப்படி?