வாயு தொல்லை நீங்க புதினா டீயை பருகுங்கள்!! உடனடி தீர்வு நிச்சயம்!!

0
63
#image_title

வாயு தொல்லை நீங்க புதினா டீயை பருகுங்கள்!! உடனடி தீர்வு நிச்சயம்!!

நாம் உணவில் வாசனைக்காக பயன்படுத்தும் புதினாவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இதில் அதிகளவு உலோகச்சத்துக்கள்,நீர்ச்சத்து,கொழுப்புச் சத்து,புரதம், கார்போஹைடிரேட்,நார்ச்சத்துக்கள்,பாஸ்பரஸ்,கால்சியம்,இரும்புச்சத்து,வைட்டமின் ஏ உள்ளிட்டவை அடங்கி இருக்கிறது.

இன்றைய காலத்தில் பெரும் அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது வாயு தொல்லை.இந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வாயுத் தொல்லையை நீக்குவதில் புதினா முக்கிய பங்கு வைக்கிறது.

அதுமட்டும் அல்லாமல் புதினாவை உணவாக எடுத்து கொள்வதால் வாய் துர்நாற்றம் அகலும்,பசியை தூண்டும், மலச்சிக்கல் பாதிப்பு நீங்கும்,ரத்தம் சுத்தமாகும்,பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும்.அதேபோல் வயிற்றில் உள்ள குடற்புழு,நாடாப்புழு உள்ளிட்டவைகளை அழிக்கவும் புதினா பெரிதும் உதவுகின்றது.

தேவையான பொருட்கள்:-

புதினா – 5 இலைகள்

டீ தூள் – 1 தேக்கரண்டி

தேன் – 1 தேக்கரண்டி
அல்லது
பனகற்கண்டு

செய்முறை:-

1)அடுப்பில் ஓரு டீ பாத்திரம் வைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் அதில் 5 புதினா இலைகளை போடவும்.பின்னர் வீட்டில் டீ போட பயன்படுத்தும் எந்த டீ தூளாக இருந்தாலும் அதில் 1 தேக்கரண்டி சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.

2)இப்பொழுது 1 டம்ளர் தண்ணீர் 1/2 டம்ளராக சுண்டி வந்ததும் அடுப்பை அணைக்க விடவும்.

3)பின்னர் அதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் தேவைக்கேற்ப சுத்தமான தேன் அல்லது பானக்கற்கண்டு சேர்த்து கலக்கி பருகவும்.

இந்த புதினா டீயில் பால் சேர்க்கலாம் குடிப்பது தான் உடலுக்கு நல்லது.தேன் அல்லது பானக்கற்கண்டு பதிலாக கருப்பட்டி சேர்த்து பருகலாம்.