தக்காளி பிரியாணி செய்ய நினைப்பவர்கள் இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்!! சிக்கன் பிரியாணியே தோற்று போய்விடும் இதன் சுவையில்!!

0
89
#image_title

தக்காளி பிரியாணி செய்ய நினைப்பவர்கள் இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்!! சிக்கன் பிரியாணியே தோற்று போய்விடும் இதன் சுவையில்!!

நம் தென்னிந்தியர்களின் விருப்ப உணவுப்பட்டியலில் முதல் இடம் பிடிப்பது பிரியாணி தான்.இந்த பிரியாணியின் சிக்கன்,மட்டன்,பிஸ்,முட்டை பிரியாணி என்று பல வகை இருக்கிறது.அதில் ஒன்று தான் தக்காளி பிரியாணி.இவற்றை அதிக சுவையாகவும்,மணமாகவும் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை பாலோ செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்:-

*சீரக சம்பா – 1 கப்

*தக்காளி – 3

*பெரிய வெங்காயம் – 1( நறுக்கியது)

*மிளகாய் தூள் – 3/4 தேக்கரண்டி

*பிரியாணி மசாலா – 1 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*இஞ்சி – சிறு துண்டு

*பூண்டு – 5 பற்கள்

*உப்பு – தேவையான அளவு

*கிராம்பு – 4

*பெருஞ்சீரகம் – 1/2 தேக்கரண்டி

*பட்டை – 1துண்டு

*பிரியாணி இலை – 1

*மராட்டி மொக்கு – 1

*அன்னாசி மொக்கு -1

*கல்பாசி – 2

*ஏலக்காய் – 1

*எண்ணெய் – 3 தேக்கரண்டி

*நெய் – 1 தேக்கரண்டி

*கொத்தமல்லி இலை – சிறிதளவு

*புதினா – சிறிதளவு

*பச்சை மிளகாய் – 1

*முந்திரி பருப்பு – 2

செய்முறை:-

முதலில் பிரியாணி செய்ய சீரக சம்பா அரசி 1 கப் அளவு எடுத்து பாத்திரத்தில் போட்டு 2 முதல் 3 முறை நன்கு அலசிக் கொள்ளவும்.பின்னர் அரசி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

அடுத்து பெரிய வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைத்து கொள்ளவும்.

பிறகு இஞ்சி மற்றும் பூண்டை தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்து கொள்ளவும்.

அடுப்பில் குக்கர் எண்ணெய் 3 தேக்கரண்டி மற்றும் நெய் 1 தேக்கரண்டி சேர்க்கவும்.அவை சூடேறியதும் அதில் பட்டை 1 துண்டு,4 இலவங்கம்,ஒரு பிரியாணி இலை,ஒரு மராட்டி மொக்கு,ஒரு அன்னாசி மொக்கு,1 /2 தேக்கரண்டி பெருஞ்சீரகம்,ஒரு ஏலக்காய்,2 முந்திரி பருப்பு மற்றும் 2 கல்பாசி சேர்க்கவும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.அதன் பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து நன்கு வதக்கி விடவும்.

தக்காளி வெந்து வரும் சமயத்தில் இஞ்சி,பூண்டு விழுது மற்றும் கொத்தமல்லி,புதினா இலைகளை சேர்த்து கிளறவும்.பின்னர் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்,3/4 தேக்கரண்டி மிளகாய் தூள்,1 தேக்கரண்டி பிரியாணி மசாலா சேர்த்து வதக்கி விடவும்.அதன் பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வேக விடவும்.

பின்னர் 1 கப் சீரக சம்பா அரிசிக்கு 2 கப் அளவு தண்ணீர் எடுத்து வெந்து கொண்டிருக்கும் கலவையில் ஊற்றவும்.தண்ணீர் கொதிக்கும் தருணத்தில் ஊறவைத்துள்ள சீரக சம்பா அரிசியில் இருந்த தண்ணீரை ஈர்த்து விட்டு அதில் போடவும்.அதை நன்கு கலக்கி விடவும்.பின்னர்குக்கரை மூடி விடவும்.தீயை சற்று அதிகப்படுத்தி 1 விசில் வரும் வரை காத்திருந்து அடுப்பை அணைக்கவும்.பின்னர் விசில் சத்தம் முழுமையாக நின்றவுடன் குக்கரை திறக்கவும்.

Previous articleநித்திய கல்யாணி.. இது ஒரு அற்புத மருத்துவ குணம் கொண்ட மூலிகைப் பூ!!
Next articleஉடலில் உள்ள அனைத்து வித பிரச்சனைகளும் நீங்க இந்த “ப்ளூ டீ” பருகுங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!!