அடேங்கப்பா.. தோப்புகரணம் போட்டால் இத்தனை நன்மைகள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே..

0
87
#image_title

அடேங்கப்பா.. தோப்புகரணம் போட்டால் இத்தனை நன்மைகள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே..

சின்ன வயதில் நான் ஏதாவது தப்பு செய்தால் உடனே ஆசிரியர் தோப்புகரணம் போடச் சொல்வார்கள். அந்த தண்டனையிலும் ஒரு நன்மை இருக்கும். தோப்புகரணம் போடுவதால் மூளையின் நரம்புகள் தூண்டப்பட்டு ஞாபகசக்தி அதிகரிக்குமாம்.

உண்மையில் தோப்புகரணம் போடுவது ஒரு உடற்பயிற்சியாகும். நம் முன்னோர்கள் அந்த காலத்திலேயே விநாயகர் முன் தோப்புகரணம் போடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். தோப்புகரணம் போடுவதால் நமக்கு நன்மைகள் பல. ஆனால், இப்போது தோப்புகரணம் போடும் பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது.

அதனால், தோப்புக் கரணம் போட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம் –

தோப்புக் கரணம் எப்படி போட வேண்டும்?

தோப்புக் கரணம் போடும்போது, முதலில் கால்களுக்கு இடையில் சிறு இடவெளி விட்டு நிற்க வேண்டும். பின்னறர், இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொள்ள வேண்டும். மூச்சை நன்றாக இழுத்துக்கொண்டு அமர வேண்டும்.  அமர்ந்த நிலையில் ஒரு மூச்சு விட்டு, பிறகு எழ வேண்டும். நின்ற நிலையில் ஒருமூச்சு விட வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 20 முறை செய்யலாம். தினமும் இப்படி செய்தால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தோப்புகரணம் போடுவதால் ஏற்படும் பயன்கள்

தோப்புக்கரணம் போடும் போது மூளையில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி பெறும். நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைக்க உதவி செய்யும்.

தோப்புகரணம் மூலம் நியூரான் செல்கள் புத்துணர்ச்சி அடையும்.

காலையில் தோப்பு கரணம் போட்டால் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

தோப்புகரணம் போடுவதால் மூளையில் உள்ள வலது மற்றும் இடது பகுதி சமமான தூண்டுதல் அடைய உதவி செய்யும். மூளைக்கு செய்திகளை பரிமாற்றம் செய்யும் காரணிகள் வலுமையாக இருக்கும்.

தோப்புக்கரணம் போடுவதால் நாடிகள் சுத்தமாகும்.

தோப்புக்கரணம் போடுவதால் உடம்பில் உள்ள நரம்பு மண்டலங்களை, காது மடல்களை இழுப்பதால் அனைத்து நரம்புகளும் தூண்டப்படும்.

 

Previous articleசுவையான “இஞ்சி இனிப்பு ஊறுகாய்”.. இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
Next articleபெண்களே உங்களுக்கு 30 வயதுக்கு மேல் ஆகி விட்டதா!!? அப்போ இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்க!!!