பொடுகு தொல்லையா? கவலை வேண்டாம் ; இதோ பாட்டி வைத்தியம்!

0
50
#image_title

பொடுகு தொல்லையா? கவலை வேண்டாம் ; இதோ பாட்டி வைத்தியம்!

பெண்களுக்கோ, ஆண்களுக்கோ தலைமுடி அதிகமாக இருந்தால் அது தனி அழகுதான். ஆனால், சிலருக்கு பூஞ்சை தொற்று காரணமாகவும், முடி வறட்சி காரணமாகவும் பொடுகு ஏற்படும்.

தலையில் பொடுகு வந்துவிட்டால், தலையில் அரிப்பு இருந்துக்கொண்டே இருக்கும். அதுமட்டுமல்லாமல் முகத்தில் பருக்களும் வரும். சருமத்தில் எண்ணெய் வடியும்.

இதனால் நமக்கு மன இறுக்கம் ஏற்படும். பொடுகு வர போதுமான நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு கூட ஒரு காரணமாக சொல்லலாம்.

சரி… கவலை விடுங்க… இயற்கை வழியில் எப்படி பொடுகை விரட்டலாம் என்று பார்ப்போம் –

தேவையான பொருட்கள் :

செம்பருத்தி பூ – 5
செம்பருத்தி இலை – சிறிதளவு
ஊற வைத்த வெந்தயம் – சிறிதளவு
நெல்லிக்காய் – 2 (கொட்டை நீக்கியது )
எலுமிச்சை சாறு  – சிறிதளவு
தயிர்  – 3 ஸ்பூன்
வேப்பிலை – சிறிதளவு
மருதாணி இலை  – சிறிதளவு

ஹேர் மாஸ்க்

முதல் நாள் இரவு வெந்தயத்தை ஊற வைத்து விட வேண்டும்.

மறுநாள் ஒரு மிக்ஸியில் செம்பருத்தி பூ, செம்பருத்தி இலை, வெந்தயம். நெல்லிக்காய்,  எலுமிச்சை சாறு, தயிர், வேப்பிலை, மருதாணி  இவை அனைத்தையும் போட்டு நன்றாக நைசாக அரைக்க வேண்டும்.

அரைத்த விழுதை தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி நன்றாக தடவ வேண்டும்.

தலையை அப்படியே அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

ஊறிய பிறகு, தலைக்கு குளித்தால் பொடுகு படிப்படியாக நீங்கிவிடும்.

பொடுகு மட்டுமல்ல, முடி நன்றாக செழித்து வளரும்.