ரோட்டு கடை “முட்டை தோசை” சுவையாக செய்யும் முறை!!

0
100
#image_title

ரோட்டு கடை “முட்டை தோசை” சுவையாக செய்யும் முறை!!

நம் அனைவருக்கும் பிடித்தாமான உணவு பொருட்களில் ஒன்று முட்டை.இந்த முட்டை அதிக சத்துக்கள் கொண்ட விலை மலிவான பொருட்களில் ஒன்றாகும்.இதில் அதிகளவு
கால்சியம்,பாஸ்பரஸ்,புரதம்,செலினியம்,போலிக் அமிலம்,இரும்பு,வைட்டமின்கள் மற்றும் அயோடின் இருக்கின்றது.இந்த முட்டையை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தோம் என்றால் எலும்பு வளர்ச்சி,உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

இந்த ஆரோக்கியமான முட்டையில் ரோட்டு கடை ஸ்டைல் முட்டை தோசை செய்யும் முறை எப்படி என்ற தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*தோசை மாவு – 1 கப்

*முட்டை – 2

*பெரிய வெங்காயம் – 1(நறுக்கியது)

*தக்காளி – 1(பொடி பொடியாக நறுக்கியது)

*பச்சை மிளகாய் – 1(பொடி பொடியாக நறுக்கியது)

*மிளகு தூள் – சிறிதளவு

*எண்ணெய் – தேவையான அளவு

*கொத்தமல்லி இலை – சிறிதளவு(நறுக்கியது)

*கருவேப்பிலை – சிறிதளவு(நறுக்கியது)

*உப்பு – தேவையான அளவு

*கறிமசால் தூள் – 1/4 தேக்கரண்டி

*மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி

செய்முறை:-

முட்டை தோசை செய்வதற்கு முதலில் 1 கப் தோசை மாவு எடுத்து கொள்ளவும்.

அடுத்து பெரிய வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,கொத்தமல்லி இலை,கருவேப்பிலை உள்ளிட்டவற்றை எடுத்து பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பவுல் எடுத்து அதில் 2 முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,கொத்தமல்லி இலை,கருவேப்பிலை உள்ளிட்டவற்றை சேர்த்து கொள்ளவும்.

பின்னர் மிளகு தூள் சிறிதளவு,கறிமசால் தூள் 1/4 தேக்கரண்டி,மிளகாய் தூள் 1/4 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும்.

அடுப்பில் தோசைக் கல் வைத்து அவை சூடேறியதும் ஒரு குழிக் கரண்டி அரிசி மாவு ஊற்றி தோசை வார்த்து கொள்ளவும்.

பின்னர் தோசை மேல் தயார் செய்து வைத்துள்ள முட்டை கலவையை முழுவதுமாக ஊற்றி பரப்பி கொள்ளவும்.பிறகு தோசையை சுற்றி தேவையான அளவு எண்ணெய் கொள்ளவும்.பின்னர் தோசையை திருப்பி போட்டு வேக வைக்கவும்.இரு புறமும் வெந்து வந்த பின்னர் அதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

Previous articleதெருவே மணக்கும் “கருவாட்டு குழம்பு” – சுவையாக செய்வது எப்படி?
Next articleஇஞ்சியின் மகத்தான பயன்கள்.. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று!!