உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் வாழைப்பூவை வைத்து இப்படி ஒருமுறை சாம்பார் செய்வது பாருங்க!! சுவை பிரமாதமாக இருக்கும்!!

0
88
#image_title

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் வாழைப்பூவை வைத்து இப்படி ஒருமுறை சாம்பார் செய்வது பாருங்க!! சுவை பிரமாதமாக இருக்கும்!!

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தருவதில் வாழைப்பூற்கு முக்கிய பங்கு இருக்கிறது.இந்த வாழைப்பூவில் அதிகளவு வைட்டமின்கள்,ஃப்ளேவனாய்ட்ஸ்,புரோட்டீன் நிறைந்து இருக்கிறது.இதை உணவாக எடுத்து கொள்வதன் மூலம் மலசிக்கல்,வாய்ப்புண் உள்ளிட்ட பாதிப்புகள் விரைவில் சரியாகும்.இந்த ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பூவில் சாம்பார் செய்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

*வாழைப்பூ – 2 கப்

*துவரம் பருப்பு – 1 கப்

*எண்ணெய் – 3 தேக்கரண்டி

*கடுகு – 1 தேக்கரண்டி

*புளிக்கரைசல் – 1/2 கப்

*மஞ்சள் துள் – 1/4 தேக்கரண்டி

*தேங்காய் – 1 கப் (துருவியது)

*வர கொத்தமல்லி – 3 தேக்கரண்டி

*கடலை பருப்பு – 1 தேக்கரண்டி

*வர மிளகாய் – 2

*வெந்தயம் – 1/4 தேக்கரண்டி

*மிளகு – 1/4 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

*பச்சை மிளகாய் – 1

*கறிவேப்பிலை – 1 கொத்து

*பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை அளவு

*கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை

அடுப்பில் கடாய் வைத்து 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றிக்கொள்ளவும்.அவை சூடேறியதும் அதில் வெந்தயம்,வர மிளகாய்,மிளகு,கடலை பருப்பு உள்ளிட்டவற்றை சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.

பின்னர் அதில் 1 கப் துருவிய தேங்காய்,1 பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும்.பின்னர் இதை ஆற விடவும்.பின்னர் இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும்.

பின்னர் சுத்தம் செய்த வாழைப்பூ மற்றும் பருப்பை தனித்தனியாக மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல்,வேக வைத்த வாழைப்பூ மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வேக விடவும்.அடுத்து அரைத்து வைத்துள்ள விழுது,வேக வைத்துள்ள பருப்பு ஆகியவற்றை சேர்த்து 3 முதல் 5 நிமிடம் கொதிக்க விடவும்.

அடுத்து மற்றொரு அடுப்பில் கடாய் வைத்து அதில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் அதில் கடுகு சேர்த்து பொரிய விடவும்.பின்னர் கருவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும்.இந்த தாளிப்பை வெந்து கொண்டிருக்கும் வாழைப்பூ சாம்பாரில் சேர்க்கவும்.பின்னர் வாசனைக்காக கொத்தமல்லி இலை
சிறிதளவு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

மேலும் வாழைப்பூ இல்லாத பட்சத்தில் சிவப்பு பூசணிக்காய்,வெள்ளை பூசணிக்காய், முருங்கைக்காய்,குடை மிளகாய் உள்ளிட்டவற்றை சேர்த்தும் சமைக்கலாம்.இப்படி சாம்பார் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

Previous article“புதினா சாதம்” செம்ம ருசியாக இருக்க இப்படி ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க!! டேஸ்ட்ல அசந்து போயிடுவீங்க!!
Next articleவீட்டு முறையில் கொத்தமல்லி தூள் செய்யும் முறை!! உணவில் 100% சுவையை கொடுக்கும்!!