பொட்டுக்கடலை முறுக்கு பிடிக்குமா? அப்போ இப்படி ஒருமுறை செய்து சாப்பிட்டு பாருங்கள்!!

0
76
#image_title

பொட்டுக்கடலை முறுக்கு பிடிக்குமா? அப்போ இப்படி ஒருமுறை செய்து சாப்பிட்டு பாருங்கள்!!

நம்மில் பெரும்பாலானோருக்கு முறுக்கு ஒரு விருப்பமான பண்டமாக இருந்து வருகிறது.அதனை நொறுங்கும் சத்தத்தோடு சுவைக்கும் பொழுது சொல்ல வாரத்தையே இல்லை.ஆனால் முறுக்கு செய்வது மிகவும் கடினம் என்று உங்களில் பலர் நினைத்து கொண்டிருக்கிறீர்கள்.கடையில் வாங்கி உண்ணும் முறுக்கு டேஸ்ட்டாக இருக்கும் என்பது உண்மை தான் ஆனால் நம் உடலுக்கு ஆரோக்கியமான முறையில் இருக்குமா? என்று நாம் சிந்திக்க வேண்டும்.முறுக்கு சுவைப்பது எப்படி சுலபமோ அதேபோல் தான் அதனை செய்வதும் சுலபம்.

தேவையான பொருட்கள்:-

*அரிசி மாவு – 3 கப்

*பொட்டுக்கடலை – 3/4 கப்

*வெண்ணெய் – 2 தேக்கரண்டி

*கருப்பு எள் – 1/2 தேக்கரண்டி

*மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி

*பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

*எண்ணெய் – முறுக்கு செய்ய தேவையான அளவு

செய்முறை:-

முறுக்கு செய்ய முதலில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் 3/4 கப் பொட்டுகடலை சேர்க்க வேண்டும். பின்னர் அதை பவுடர் பதத்திற்கு மாற்றி கொள்ளவும்.இதை ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி கொள்ளவும்.

அடுத்து அதில் 3 கப் அரிசி மாவு,1/2 தேக்கரண்டி கருப்பு எள்,1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்,1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள்,தேவையான அளவு உப்பு,மற்றும் 2 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து நன்கு பிசையவும்.பின்னர் அதில் தேவையான அளவு வெந்நீர் சேர்த்து முறுக்கு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பிறகு அடுப்பில் கடாய் வைத்து அதில் முறுக்கு பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக்கொள்ளவும்.பின்னர் அவை சூடேறியதும் தயார் செய்து வைத்துள்ள மாவை முறுக்கு அச்சில் சேர்த்து முறுக்கு பிழிந்து கொள்ளவும்.மிதமான தீயில் முறுக்கு நன்கு வெந்து வரும் வரை விட்டு பின்னர் அதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

Previous articleஅம்மன் படத்துல நடித்தபோது படுகவர்ச்சி காட்டி நடித்தேன்.. மனம் திறந்த ரம்யாகிருஷ்ணன்!
Next articleநம் முன்னோர்களுக்கு எப்படி படையல் போட வேண்டும்ன்னு தெரியுமா?