தித்திக்கும் “பால் பாயசம்”.. இப்படி செய்தால் சுவை கூடும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

0
101
#image_title

தித்திக்கும் “பால் பாயசம்”.. இப்படி செய்தால் சுவை கூடும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

நமக்கு மிகவும் பிடித்த அறுசுவை உணவுகளில் ஒன்று இனிப்பு.இதில் பல்வேறு உணவு வகைகள் இருக்கிறது.இந்த இனிப்பு வகைகளில் ஒன்று பாயசம்.இதில் அவல் பாயசம்,ஜவ்வரிசி பாயசம்,பாசிப்பயறு பாயசம்,அரிசி பாயசம் என்று பல வகைகள் இருக்கிறது.அதில் ஒன்று தான் பால் பாயசம்.இந்த வகை பாயசம் மிகவும் தித்திப்பாகவும்,அதிக சுவையுடனும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*பால் – 1/2 லிட்டர்

*பச்சரிசி – 1 1/2 தேக்கரண்டி

*சர்க்கரை – தேவையான அளவு

*முந்திரி பருப்பு – 10 முதல் 12

*உலர் திராட்சை – 5 முதல் 8

*ஏலக்காய் தூள்  – 3 தேக்கரண்டி

*நெய் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

1.முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் 1 1/2 தேக்கரண்டி பச்சரிசி சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

2.அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர் பால் மற்றும் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

3.பால் நன்கு கொதித்து வந்த பின்னர் ஊற வைத்துள்ள பச்சரிசியை சேர்த்து நன்கு கிண்டவும்.

4.பாலில் சேர்க்கப்பட்ட பச்சரிசி வெந்து கெட்டி தன்மையை அடைந்ததும் அதில் தேவையான அளவு சர்க்கரை மற்றும் 3 தேக்கரண்டி அளவு ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.

5.மற்றொரு அடுப்பில் கடாய் வைத்து அதில் 1 தேக்கரண்டி அளவு நெய் ஊற்றிக் கொள்ளவும்.அவை சூடேறியதும் அதில் 10 முந்திரி பருப்பு,5 உலர் திராட்சை போட்டு வறுக்கவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.இந்த வறுத்த பொருட்களை கொதித்து கொண்டிருக்கும் பால் பாயசத்தில் சேர்த்து கிளறி விடவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.

Previous articleஉடல் எடையை சரசரனு குறைக்க உதவும் மணத்தக்காளி கீரை!!
Next articleஉங்கள் பெட்டில் மூட்டை பூச்சி அதிகளவில் உள்ளதா? அப்போ இது தான் எளிய தீர்வு!! உடனே இதை ட்ரை பண்ணுங்க!!