உங்கள் பெட்டில் மூட்டை பூச்சி அதிகளவில் உள்ளதா? அப்போ இது தான் எளிய தீர்வு!! உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

0
69
#image_title

உங்கள் பெட்டில் மூட்டை பூச்சி அதிகளவில் உள்ளதா? அப்போ இது தான் எளிய தீர்வு!! உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் மூட்டை பூச்சி தொல்லை அதிகம் இருக்கும்.இவை நம் இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழ்ந்து வருகிறது.இந்த மூட்டை பூச்சி பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.காரணம் அப்பொழுது தான் மனிதர்கள் உறங்குவார்கள்.அந்த சமயத்தில் தான் அதனால் இரத்தத்தை உறிஞ்ச முடியும்.இதனால் இரவில் நிம்மதியான தூக்கம் இல்லாமல் அனைவரும் அவதிப்பட்டு வருகிறோம்.

இப்படி நம்மை பாடாய் படுத்தி வரும் மூட்டை பூச்சியை வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து எளிதில் விரட்டி விடலாம் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் கீழ் உள்ள செய்முறை விளக்கத்தை பாலோ செய்து பாருங்கள் ஒரே நாளில் வீட்டில் உள்ள அனைத்து மூட்டை பூச்சிகளும் செத்து மடிந்து விடும்.

தேவையான பொருட்கள்:-

*புதினா – 1 கைப்பிடி அளவு

*வேப்ப எண்ணெய் – 2 தேக்கரண்டி

*யூகலிப்டஸ் எண்ணெய் – 2 தேக்கரண்டி

*கிராம்பு எண்ணெய் – 2 தேக்கரண்டி

*லாவெண்டர் எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் 1 கைப்பிடி அளவு புதினா எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும்.பின்னர் இதை ஒரு பவுலுக்கு வடிகட்டி கொள்ளவும்.

அடுத்து 2 தேக்கரண்டி வேப்ப எண்ணெய்,2 தேக்கரண்டி யூகலிப்டஸ் எண்ணெய்,2 தேக்கரண்டி கிராம்பு எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டி லாவெண்டர் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளவும்.பின்னர் வீடுகளில் மூட்டை பூச்சு நடமாட்டம் இருக்கும் இடங்களில் இதை ஸ்ப்ரே பண்ணவும்.இப்படி செய்வதன் மூலம் வீட்டில் உள்ள மூட்டை பூச்சிகள் அனைத்தும் இறந்து விடும்.

மூட்டை பூச்சு தொல்லையில் இருந்து விடுப்பட வேறு சில வழிகள்:-

*ஓரு தேக்கரண்டி கிராம்பு எண்ணெயை 1 கப் தண்ணீரில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.இதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி மூட்டை பூச்சி இருக்கும் இடத்தில் தெளிக்கவும்.

*சிறந்த கிருமி நாசினியான வேப்ப எண்ணெய் 1 தேக்கரண்டி எடுத்து 1 கிளாஸ் தண்ணீரில் கலந்து கொள்ளவும்.பின்னர் அதில் 1/2 தேக்கரண்டி சோப்பு சேர்த்து நன்கு கலக்கி ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி மூட்டை பூச்சி இருக்கும் இடத்தில் தெளிக்க வேண்டும்.10 முதல் 15 நாட்களுக்கு தொடர்ந்து தெளித்து வர மூட்டை பூச்சி தொல்லை விரைவில் நீங்கும்.