செரிமானத்திற்கு உகந்த “கருவேப்பிலை சாதம்”!! இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.. சுவை அட்டகாசமாக இருக்கும்!!

0
57
#image_title

செரிமானத்திற்கு உகந்த “கருவேப்பிலை சாதம்”!! இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.. சுவை அட்டகாசமாக இருக்கும்!!

நாம் உணவில் சேர்க்கும் கருவேப்பிலையில் அதிகளவு கால்சியம்,இரும்புச் சத்து,நார்ச்சத்து வைட்டமின் ஏ,பி மற்றும் சி நிறைந்து காணப்படுகிறது.இவை இரத்த சோகை,செரிமான பாதிப்பு,உடல் பருமன் உள்ளிட்டவற்றிற்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.

இவ்வளவு சத்துக்களை கொண்டுள்ள கருவேப்பிலையை பயன்படுத்தி சாதம் செய்தால் மிகவும் சுவையாகவும்,ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*வடித்த சாதம் – 1 கப்

*வர மிளகாய்- 5

*கருவேப்பிலை – 4 கைப்பிடி அளவு

*கொத்தமல்லி விதை -1 கைப்பிடி அளவு

*கருப்பு மிளகு – 2 தேக்கரண்டி

*கடலைப் பருப்பு – 1 கைப்பிடி அளவு

*துவரம் பருப்பு- 1/2 கைப்பிடி அளவு

*உளுத்தம் பருப்பு – 1/2 கைப்பிடி அளவு

*பெருங்காய தூள் – 1 தேக்கரண்டி

*முந்திரிப் பருப்பு – 10

*நிலக்கடலை – சிறிதளவு

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

அடுப்பில் கடாய் வைத்து 5 வர மிளகாய்,4 கைப்பிடி அளவு கருவேப்பிலை,1 கைப்பிடி அளவு கொத்தமல்லி விதை,2 தேக்கரண்டி கருப்பு மிளகு,1 கைப்பிடி அளவு கடலைப் பருப்பு,1/2 கைப்பிடி அளவு துவரம் பருப்பு,1/2 கைப்பிடி அளவு உளுத்தம் பருப்பு,1 தேக்கரண்டி பெருங்காய தூள் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.பின்னர் அடுப்பை அணைத்து அவற்றை நன்கு ஆற விடவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் வறுத்து வைத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.

பிறகு அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.அவை சூடேறியதும் அதில் கடுகு 1 தேக்கரண்டி,வர மிளகாய் 2 சேர்த்து பொரிய விடவும்.பின்னர் எடுத்து வைத்துள்ள 10 முந்திரி பருப்பு,சிறிதளவு வேர்க்கடலை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.

இறுதியாக தயார் செய்து வைத்துள்ள கருவேப்பிலை பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி விடவும்.பின்னர் வடித்து வைத்துள்ள 1 கப் சாதத்தை கொட்டி நன்கு கிளறி விடவும்.நன்கு கிளறி விட்ட பிறகு அடுப்பை அணைக்கவும்.