பாம்பு கடித்த நபர் முதலில் இதை செய்தால் உயிர் பிழைத்து விடலாம்!! 100% தீர்வு உண்டு!!

0
61
#image_title

பாம்பு கடித்த நபர் முதலில் இதை செய்தால் உயிர் பிழைத்து விடலாம்!! 100% தீர்வு உண்டு!!

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள்.பாம்பு அனைவருக்கும் பயத்தை காட்டும் உயிரினமான இருக்கிறது.இவை கொட்டிவிட்டால் உயிருக்கு நிச்சயம் ஆபத்து தான்.பாம்பு கடித்தால் சில வழிகளை கடைபிடிப்பதன் மூலம் உயிர் பிழைத்து விடலாம்.

பாம்பு கடித்தால் முதலில் செய்ய வேண்டியவை:-

*பாம்பு கடித்தால் முதலில் பதட்டப் படாமல் இருக்க வேண்டும்.பதட்டப்படுவதன் மூலம் பாம்பின் விஷம் இரத்தத்தில் வேகமாக பரவத் தொடங்கி விடும்.இதனால் உயிரை காப்பாற்றுவது கடினமாகி விடும்.

*பின்னர் பாம்பு கடித்த இடத்தில் ஒரு துணி கொண்டு லேசாக கட்ட வேண்டும்.இறுகி கட்டினால் அவை உயிருக்கு ஆபத்தாக மாறி விடும்.

*பாம்பு கடி பட்ட நபரை மருத்துவமனைக்கு கொண்டு போகும் போது அவரை நடக்க விடக்கூடாது.அதேபோல் உடல் வேகமாக குலுங்கும்படியும் தூக்கிக்கொண்டு ஓடக் கூடாது.இதை பார்த்து தான் கையாள வேண்டும்.

*பாம்பு கடி பட்ட இடத்தில் இரத்தம் வந்தால் அதை தடுக்காமல் வெளியே விடவும்.காரணம் பாம்பின் விஷம் கலந்த இரத்தம் தான் முதலில் வெளியேற்த் தொடங்கும்.

*பாம்பு கடிப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

*பாம்பு கடிபட்ட நபரை மருத்துவமனைக்கு படுக்க வைத்து கூட்டி செல்லவும்.

*எந்த பாம்பு கடித்தது என்பதை மருத்துவரிடம் சொல்வதன் மூலம் உடனடியாக சிகிச்சை பெற முடியும்.எது கடித்தாலும் முதலில் மருத்துவமனைக்கு செல்வது மிகவும் முக்கியம்.அலட்சியப் படுத்தினால் உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு சேர்த்து விடும்.

*ஒருவேளை மருத்துவமனை இல்லாத ஊராக இருந்தால் கிராமங்களில் பின்பற்றப்படும் பாம்பு கடி வைத்தியத்தை கடைபிடிப்பது நல்லது.

*பாம்பு கடித்த இடத்தில் வாயால் இரத்தத்தை வைத்து உரியக் கூடாது.காரணம் வாய் வைத்து உறிஞ்சும் நபரின் உடலிலும் பாம்பு விஷம் பரவி விடும்.

*அதேபோல் பாம்பு கடித்த இடத்தில் வெட்ட கூடாது.காயத்தை அதை பெரிதாக்கி விடும்.

*குளிர்ந்த பொருட்களை பாம்பு கடி மேல் வைப்பதை தவிர்க்க வேண்டும்.