ரிங் முறுக்கு பிடிக்குமா? அப்போ இதுபோல் ஒருமுறை செய்து பாருங்கள்!! செம்ம ருசியாக இருக்கும்!!

0
66
#image_title

ரிங் முறுக்கு பிடிக்குமா? அப்போ இதுபோல் ஒருமுறை செய்து பாருங்கள்!! செம்ம ருசியாக இருக்கும்!!

நம்மில் பெரும்பாலானோருக்கு முறுக்கு மிகவும் பிடித்த பண்டமாக இருக்கிறது.அதனை நொறுங்கும் சத்தத்தோடு சுவைக்கும் பொழுது சொல்ல வாரத்தையே இல்லை.

இதில் பொட்டுக்கடலை முறுக்கு,வெண்ணை முறுக்கு,பூண்டு முறுக்கு,அரிசி முறுக்கு என்று பல வகைகள் இருக்கிறது.பொதுவாக முறுக்கு செய்வது மிகவும் கடினம் என்று உங்களில் பலர் நினைத்து கொண்டிருக்கிறீர்கள்.கடையில் வாங்கி உண்ணும் முறுக்கு டேஸ்ட்டாக இருக்கும் என்பது உண்மை தான் ஆனால் நம் உடலுக்கு ஆரோக்கியமான முறையில் இருக்குமா? என்று நாம் சிந்திக்க வேண்டும்.முறுக்கு சுவைப்பது எப்படி சுலபமோ அதேபோல் தான் அதனை செய்வதும் சுலபம்.ரிங் முறுக்கு சுவையாக செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*அரிசி மாவு – 1 கப்

*மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

*சீரகம் – 1 தேக்கரண்டி

*கருப்பு மிளகு – 1 தேக்கரண்டி

*எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும்.பிறகு 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.அடுத்து 1 தேக்கரண்டி மிளகாய் தூள் மற்றும் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நீரை சூடு படுத்தவும்.

1 கொதி வரும் தருணத்தில் அதில் 1 கப் அரிசி மாவு சேர்த்து கட்டி பிடிக்காமல் கிளறி விடவும்.பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.அடுத்து இதை நன்கு ஆறவிடவும்.

பின்னர் அதை சப்பாத்தி மாவு பதத்திற்கு அழுத்தம் கொடுத்து பிசைந்து கொள்ளவும்.பிறகு ஒரு ஈரத்துணியை எடுத்து அந்த மாவின் மேல் போட்டு 1/2 மணி நேரம் வரை ஊற விடவும்.

அரை மணி நேரத்திற்கு பிறகு ஊற வைத்த மாவை எடுத்து நன்கு அழுத்தம் கொடுத்து மீண்டும் பிசையவும்.பின்னர் மாவை நீள வாக்கில் சுருட்டுங்கள்.அதை வட்டமாக மடித்து முணைகளை மூடிவிடுங்கள்.இப்படி ஒவ்வொன்றாக ரிங் வடிவில் செய்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் கடாய் வைத்து அதில் முறுக்கு பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.அவை சூடேறியதும் தயார் செய்து வைத்துள்ள முறுக்கு மாவை ஒவ்வொன்றாக சேர்த்து இரு புறமும் வெந்து வரும் வரை திருப்பி திருப்பி போடவும்.ரிங் முறுக்கு நன்கு வெந்து வந்ததும் அதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.பின்னர் அடுத்தது ரிங் முறுக்கு மாவை எண்ணெய்யில் போட்டு வெந்து வந்ததும் ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.