உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் “கொத்தவரங்காய் சாம்பார்”!! இப்படி ஒருமுறை செய்து பாருங்கள் சுவை வேற லெவெலில் இருக்கும்!!

0
67
#image_title

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் “கொத்தவரங்காய் சாம்பார்”!! இப்படி ஒருமுறை செய்து பாருங்கள் சுவை வேற லெவெலில் இருக்கும்!!

நம் சமையலில் கொத்தவரங்காய் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து கொன்டே வருகிறது.இதனால் எண்ணற்ற சத்துக்களை நம் உடல் இழந்து வருகிறது.அதிக சத்துக்களை கொண்டிருக்கும் காய்களில் ஒன்று இந்த கொத்தவரை.எதை சீனி அவரை என்றும் கூறுவார்கள்.இதில் பாஸ்பரஸ்,கால்சியம்,பொட்டாசியம்,இரும்புச்சத்து,பொட்டாசியம் ஆகியவை நிறைந்து இருக்கிறது.

இந்த காயில் பொரியல்,வத்தல்,குழம்பு உள்ளிட்ட உணவுகள் செய்து உண்ணப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த கொத்தவரங்காயை வைத்து சுவையான சாம்பார் செய்வது எப்படி என்பது குறித்த முறையான செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*கொத்தவரங்காய் – 1/4 கிலோ

*துவரம் பருப்பு – 1 கப்

*விளக்கெண்ணெய் – 1/2 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*சாம்பார் தூள் – 3/4 தேக்கரண்டி

*உப்பு – தேவையானஅளவு

*புளி – எலுமிச்சம் பழ அளவு

*சமையல் எண்ணெய் – 2 தேக்கரண்டி

*கடுகு – 1/2 தேக்கரண்டி

*உளுத்து பருப்பு – 1/2 தேக்கரண்டி

*வரமிளகாய் – 2

*பெருங்காய்த்தூள் – 1/2 தேக்கரண்டி

*கறிவேப்பிலை – 1 கொத்து

*கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 1/4 கிலோ கொத்தவரங்காய் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் அதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து ஒரு பவுல் எடுத்து அதில் எடுத்து வைத்துள்ள புளியை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.

அடுப்பில் குக்கர் வைத்து அதில் 1 கப் துவரம் பருப்பு போட்டுக் கொள்ளவும்.பின்னர் 1/2 தேக்கரண்டி விளக்கெண்ணெய்,1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்க்கவும்.அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விடவும்.4 விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும்.

பின்னர் அடுப்பில் கடாய் வைத்து 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.அவை சூடேறியதும் அதில் நறுக்கி வைத்துள்ள கொத்தவரங்காய் சேர்த்து வதக்கவும்.பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி எடுத்து வைத்துள்ள சாம்பார் தூள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

பிறகு குக்கரில் உள்ள பருப்பு கலவையை அதில் சேர்த்து கொள்ளவும்.அடுத்து எடுத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வேக விடவும்.

அடுத்து மற்றொரு அடுப்பில் ஒரு கடாய் வைத்து 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.அவை சூடேறியதும் அதில் 1/2 தேக்கரண்டி கடுகு,1/2 தேக்கரண்டி உளுத்து பருப்பு, 2 வரமிளகாய்,1/2 தேக்கரண்டி பெருங்காயத் தூள்,1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.

இந்த தாளித்த கலவையை கொதிக்கும் குழம்பில் சேர்த்து நன்கு கலக்கவும்.அடுத்து வாசனைக்காக சிறிதளவு கொத்தமல்லி தழைகளை சேர்த்து கிளறி இறக்கவும்.