பால் இருந்தால் போதும் வாயில் வைத்ததும் கரையும் கேக் சிறிது நேரத்தில் செய்து விடலாம்!!

0
74
#image_title

பால் இருந்தால் போதும் வாயில் வைத்ததும் கரையும் கேக் சிறிது நேரத்தில் செய்து விடலாம்!!

நம் உடலை ஆரோக்கியமாக வைக்க பால் அவசியமான ஒன்றாக இருக்கிறது.இதில் அதிகளவு கால்சியம்,புரதம்,கொழுப்பு உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.இந்த ஆரோக்கியம் நிறைந்த பாலை வைத்து வாயில் வைத்ததும் கரையும் சுவையான கேக் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*பால் – 1 1/2 லிட்டர்

*வினிகர் – 1 தேக்கரண்டி
அல்லது
எலுமிச்சை சாறு

*சர்க்கரை – 150 கிராம்

*ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 லிட்டர் அளவிற்கு பால் சேர்த்து கொதிக்க வைக்கவும்.பின்னர் அந்த பால் அடிபிடிக்காமல் இருக்க அடிக்கடி கிண்டி விடவும்.1 1/2 லிட்டர் பாலானது சுண்டி 1 லிட்டர் என்று வரும் வரை சுண்ட காய்ச்சவும்.

பிறகு அதில் 1 தேக்கரண்டி வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும்.இவ்வாறு செய்வதன் மூலம் பால் திரிந்து வரும்.

இதன் பின் அதில் 150 கிராம் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விடவும்.கொதிக்கும் பாலில் உள்ள தண்ணீர் வற்றும் வரை கிளறி கொண்டே இருக்கவும்.

பின்னர் 1/4 தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.பிறகு அடுப்பை அணைக்கவும்.இப்பொழுது தயார் செய்து வைத்துள்ள பால் கலவையை ஓரு கேக் டிரேயில் ஊற்றி சமப்படுத்தி 2 மணி நேரம் ஆறவிடவும்.பின்னர் இந்த பால் கேக்கை சிறு சிறு பீஸாக வெட்டி கொள்ளவும்.

Previous articleதலைமுடியை கிடுகிடுவென வளர வைக்கும் கறிவேப்பிலை கெட்டிக் குழம்பு – சுவையாக செய்வது எப்படி?
Next articleஉடல் எடையை அசால்ட்டாக குறைக்க உதவும் “ரோஜா இதழ் தேநீர்”!! உடனே ட்ரை பண்ணுங்க!!