தஞ்சை பெரியகோயிலில் நவராத்திரி கலைவிழா!!! நவம்பர் நாளை மறுநாள் தேதி தொடக்கம்!!!
தஞ்சை மாவட்டம் பெரிய கோயிலில் நவராத்திரி கலை விழா நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 15ம் தேதி கோலகலமாக தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உலக அளவில் புகழ் பெற்றுள்ள பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டு தோறும் நவராத்திரி கலைவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் நவராத்திரி கலைவிழா தஞ்சை பெரிய கோயிலில் கொண்டாடப்படவுள்ளது.
இந்த ஆண்டு நவராத்திரி கலைவிழா தஞ்சை பெரிய கோயிலில் அக்டோபர் 15ம் தேதி அதாவது நாளை மறுநாள் தொடங்குகின்றது. இதையடுத்து நவராத்திரி கலைவிழாவின் அக்டோபர் 15ம் தேதி தொடங்கிய அக்டோபர் 24ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் 9 நாளும் பெரியநாயகி அம்மனுக்கு ஒன்பது விதமான அலங்காரம் செய்யப்படவுள்ளது.
அதன்படி முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை(அக்டோபர்15) பெரிய கோயிலில் உள்ள பெரிய நாயகி அம்மனுக்கு மனோன்மனி அலங்காரம் செய்யப்படவுள்ளது. இரண்டாம் நாளான அக்டோபர் 16ம் தேதி மீனாட்சி அலங்காரமும், மூன்றாம் நாளாளான 17ம் தேதி சைஸ் அலங்காரமும், 18ம் தேதி காயத்ரி அலங்காரமும், அக்டோபர் 19ம் தேதி அன்னபூரணி அலங்காரமும், அக்டோபர் 20ம் தேதி கஜலட்சுமி அலங்காரமும், அக்டோபர் 21ம் தேதி சரஸ்வதி அலங்காரமும், அக்டோபர் 22ம் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், அக்டோபர் 23ம் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், அக்டோபர் 24ம் தேதி விஜயதசமி அலங்காரமும் செய்யப்படவுள்ளது.
நவராத்திரி விழாவின் பொழுது தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெரியநாயகி அம்மனுக்கு காலை 7.30 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறவுள்ளது. மேலும் தினமும் மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.