இனி ரேஷன் பொருட்கள் வாங்க பணம் கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை – அரசு அறிவிப்பு!!

0
36
#image_title

இனி ரேஷன் பொருட்கள் வாங்க பணம் கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை – அரசு அறிவிப்பு!!

இன்றைய நவீன காலத்தில் அனைத்தும் டிஜிட்டலுக்கு மாறிவிட்டது.இதனால் நாடு வளர்ச்சி பாதையை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வருகிறது.மால் முதல் பெட்டி கடை வரை அனைத்து இடங்களிலும் ஆன்லைன் பேமெண்ட் வசதி வந்துவிட்டதால் காகித நாணயத்தின் பயன்பாடு சற்று குறைந்துள்ளது.அதேபோல் சில்லறை தட்டுப்படும் நீங்கி இருக்கிறது.நாடு ஒவ்வொரு நாளும் புது புது வளர்ச்சியை கண்டு வரும் நிலையில் ரேஷன் கடைகளிலும் டிஜிட்டல் முறைகளை கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த காலங்களில் ரேஷன் பொருட்கள் வாங்க ஒரு புக் பயன்படுத்தப்பட்டு வந்தது.இந்த புக் விரைவில் கிழிந்து விடும் தன்மை கொண்டிருந்ததால் ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் பொருட்கள் வாங்க கை ரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டு நடைமுறையில் இருக்கிறது.அடுத்து கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வாங்கும் வசதியை அரசு ஏற்படுத்தி வருகிறது.இவ்வாறு ரேஷன் கடைகளில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில் புதிதாக யு.பி.ஐ பேமண்ட் வசதி தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அறிமுகமாகி இருக்கிறது.

தமிழகத்தில் மொத்தம் 34,773 ரேஷன் கடைகள் இருக்கிறது.அதில் 33,377 நியாயவிலைக் கடைகள் கூட்டுறவுத் துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறது.இந்த கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் மூலம் 2,02,45,357 ரேஷன் அட்டைகளுக்கு குறைவான விலையில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வரப்படுகிறது.

பொது விநியோக திட்டத்தின் கீழ் அரசி,கோதுமை விலை இல்லாமலும்,எண்ணெய்,துவரம் பருப்பு,சர்க்கரை குறைந்த விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.மாதம் ஒரு முறை விநியோகம் செய்யப்படும் இந்த பொருட்களை வாங்க இனி ரூபாய் நோட்டு எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை.காரணம் இனி யு.பி.ஐ செயலிகளான போன் பே,பேடிஎம்,கூகுள் பே உள்ளிட்டவை மூலம் பணம் செலுத்தி ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.யு.பி.ஐ செயலிகள் மூலம் செலுத்தப்படும் பணம் நேரடியாக தமிழக அரசுக்கு சென்றுவிடும்.

மேலும் ரேஷன் பொருட்கள் வாங்க நாம் கொடுக்கும் பணத்தில் மீதம் இருந்தால் அதற்கு சில்லறை கொடுக்காமல் நமக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் டீதூள்,சோப்,தீ பெட்டி,உப்பு உள்ளிட்ட பொருட்களை கொடுத்து ரேஷன் ஊழியர்கள் சமாளித்து விடுவார்கள்.ஒரு சில ரேஷன் கடைகளில் நமக்கு தரவேண்டிய சில்லறையை கொடுக்காமல் ஏமாற்றுவதும் உண்டு.அதுமட்டும் இன்றி பொருளுக்கு செலுத்த வேண்டிய பணத்தை விட கூடுதலாக ரூ.5 அல்லது ரூ.10தை ரேஷன் ஊழியர்கள் நம்மிடம் பெறுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் யு.பி.ஐ பேமெண்ட் வசதி வந்து விட்டால் இந்த வகை தொல்லையில் இருந்து ரேஷன் அட்டைதாரர்கள் தப்பித்து விடலாம் என்பதினால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.