கேரள ஸ்பேஷல் பழம் பொரி – சுவையாக செய்வது எப்படி?

0
84
#image_title

கேரள ஸ்பேஷல் பழம் பொரி – சுவையாக செய்வது எப்படி?

நேந்திரம் பழத்தில் நம் உடலுக்கு தேவையான மருத்துவ குணங்கள் உள்ளன. நேந்திரம் பழம் நம் ரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். உடல் பலவீனமாக இருப்பவர்கள் தினமும் நேந்திரம் பழம் சாப்பிட்டால் நிச்சயம் உடல் தேரும். 6 மாத குழந்தைகளுக்கு உணவில் நேந்திரம் பழத்தினை வேகவைத்து நெய் சேர்த்துக் கொடுத்தால் குண்டாவார்கள். நேந்திரம் பழம் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

தேவையான பொருட்கள்

மைதா – கால்கிலோ
நடுத்தரமான நேந்திரம் பழம் – 2
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

முததில் நேந்திர பழத்தை நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர், ஒரு பாத்திரத்தில் மைதா, அரிசிமாவு, மஞ்சள்தூள், சர்க்கரை, உப்பு  அனைத்தையும் ஒன்றாக கலந்து கெட்டியாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

பஜ்ஜி மாவுப் பதத்தில் இருக்க வேண்டும். பின்னர், நேந்திரப் பழத்துண்டை மாவில் நனைத்துத் தேங்காய் எண்ணெயில் இரு பக்கமும் சிவக்கப் பொரித்தெடுத்தால் சுவையான பழம்பொரி தயாராகி விடும்.

Previous article1 நிமிடத்தில் எறும்பு தொல்லை தொல்லை முழுமையாக நீங்கி விடும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!
Next articleநாள்பட்ட நெஞ்சு சளி 2 நிமிடத்தில் கரைந்து வெளியேறி விடும்!! இப்போவே ட்ரை பண்ணி பாருங்க!!