பாத்ரூமில் உள்ள விடாப்பிடியான மஞ்சள் கறை 5 நிமிடத்தில் நீங்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

0
152
#image_title

பாத்ரூமில் உள்ள விடாப்பிடியான மஞ்சள் கறை 5 நிமிடத்தில் நீங்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

நம் வீட்டு பாத்ரூமில் படிந்து கிடக்கும் மஞ்சள் கறைகளை 5 நிமிடத்தில் சுத்தம் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.இந்த முறைகளை பயன்படுத்தினால் உடனடி பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*சீகைக்காய் தூள் – 2 பாக்கெட்

*ஷாம்பு – 1 பாக்கெட்

*சமையல் சோடா – 1 தேக்கரண்டி

*எலுமிச்சம் பழ சாறு – 1 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு பெரிய பாத்திரம் எடுத்து அதில் 2 பாக்கெட் சீகைக்காய் தூள் மற்றும் ஏதேனும் ஒரு வகை 1 ரூபாய் ஷாம்பு ஒன்று சேர்த்து கொள்ளவும்.

பின்னர் அதில் 1 தேக்கரண்டி சமையல் சோடா மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பிறகு அதில் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.இதை நன்கு கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் பாத்ரூமில் கறை இருக்கும் இடங்களில் இதை ஸ்ப்ரே செய்து கொள்ளவும்.

அடுத்து பாத்ரூம் சுத்தம் செய்ய பயனப்டுத்தும் பிரஸ் கொண்டு ஸ்ப்ரே செய்த இடங்களில் அதிகம் அழுத்தி தேய்க்காமல் லேசாக தேய்த்தாலே போதும் விடாப்பிடியான கறைகள் அனைத்தும் உடனடியாக நீஙகி விடும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*ரெட் ஹார்பிக் – தேவையான’அளவு

*வினிகர் – 2 அல்லது 3 தேக்கரண்டி

*சோப் – சிறு துண்டு

*பிரஷ் – 1

*ஸ்ப்ரே பாட்டில் – 1

செய்முறை:-

ஒரு பவுலில் பாத்ரூம் சுத்தம் செய்ய தேவையான அளவு ரெட் ஹார்பிக் ஊற்றிக் கொள்ளவும்.

பின்னர் அதில் 3 தேக்கரண்டி வினிகர் ஊற்றிக் கொள்ளவும்.இவை இரண்டையும் ஒரு ஸ்பூன் கொண்டு நன்கு கலந்து விடவும்.பின்னர் இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அதில் 1/2 லிட்டர் தண்ணீர் கலந்து பாத்ரூமில் மஞ்சள் கறை படிந்துள்ள இடங்களில் ஸ்ப்ரே செய்து கொள்ளவும்.

பின்னர் ஒரு பிரஷ் கொண்டு ஸ்ப்ரே செய்த இடத்தில் தேய்த்து கொள்ளவும்.அடுத்து சிறு துண்டு சோப் எடுத்து ஒரு பவுலில் போட்டுக் கொள்ளவும்.அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கரைத்து கறை படிந்த இடத்தில் ஊற்றி கொள்ளவும்.

மீண்டும் பாத்ரூம் பிரஷ் வைத்து தேய்த்து தண்ணீர் ஊற்றி அடித்து விடவும்.இவ்வாறு செய்தால் பாத்ரூமில் படிந்த கிடந்த மஞ்சள் கறைகள் முழுவதுமாக நீங்கு பாத்ரூம் பளிச்சிடும்.

Previous articleதலைமுடி கடகடனு வளர ஈஸியான முறையில் மூலிகை எண்ணெய் தயாரிக்கும் முறை!!
Next articleஇது தெரியுமா? பலா பழத்தை விட அதன் விதைகளில் தான் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி இருக்கிறது!!