இனி செந்தில்பாலாஜி காலத்துக்கும் புழல் தான்.. ரவுண்டு கட்டும் அடுத்தடுத்த வழக்குகள்!!

0
123
Another corruption case against Senthil Balaji
Another corruption case against Senthil Balaji

இனி செந்தில்பாலாஜி காலத்துக்கும் புழல் தான்.. ரவுண்டு கட்டும் அடுத்தடுத்த வழக்குகள்!!

அதிமுகவில் 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த பொழுது பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில் தற்பொழுது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கைது நடவடிக்கை என்று வந்தவுடன் நெஞ்சுவலி என்ற கபட நாடகம் ஆரம்பித்து அது பைபாஸ் அறுவை சிகிச்சை வரை கொண்டுவந்து விட்டது.குறிப்பாக பல ஆண்டுகளாக கட்சியிலிருந்த மூத்த தலைவர் மருத்துவமனையில் இருந்த பொழுது கூட முதல்வர் ஒருபொழுதும் எட்டிப் பார்க்கவில்லை.

தற்பொழுது இணைந்த செந்தில் பாலாஜி-காக இந்த வழக்கில் முதல்வர் அதிக அளவு  மும்மரம் காட்டி வருகிறார். இதுவே கட்சிக்குள் மனகசப்பை ஏற்படுத்தியது.செந்தில் பாலாஜி, குறிப்பிட்ட சில காலத்திலேயே வீட்டின் இல்லத்து ராணி முதல் அனைவரிடமும் கணக்கு காட்டியே கவர்ந்து விட்டாராம். அதுமட்டுமின்றி தற்பொழுது இவரிடம்  அமலாக்கத்துறை விசாரணை செய்தபோது கூட பல கேள்விகளுக்கு மழுப்பும் பதிலை தான் தெரிவித்து உள்ளார்.இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஒரு பக்கம் குட்டு உடைந்து விடுமோ என்றொரு பயமும் முதல்வருக்கு இருக்க தான் செய்கிறது.

ஒவ்வொரு முறை ஜாமின் மனுவானது  தள்ளுபடி செய்யும் பொழுதெல்லாம் முதல்வர் அவர்கள் தனிப்பட்ட முறையில் செந்தில்பாலஜிக்கு, கவலை கொள்ள வேண்டாம் என்று ஆறுதல் சொல்லியும் வருகிறாராம். அந்த வகையில் நேற்று இவரது ஜாமின் மனு வழக்கானது தேதி குறிப்பிடாமலேயே தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இவருக்கு ஜாமின் மனு கிடைப்பதற்குள்ளேயே  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இவர் மீது மேலும் பல வழக்குகள் குவிந்த வண்ணமாகவே உள்ளது. அந்த வகையில் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொழுது போக்குவரத்து கழகம் சார்பாக காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தவர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அதிக மதிப்பெண் எடுத்தவர்களை நீக்கி உள்ளனர்.

இதற்கு காரணமாக நீங்கள் பி.இ மற்றும் நேர்முகத் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தது தான் காரணம் என்றும் கூறியுள்ளனர். இதனை அறிந்த தேர்வாளர்கள் இது குறித்து புகார் அளித்தும், காவல் உதவி ஆணையர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சேலத்தை சேர்ந்த தேர்வாளர்கள் இருவர், இது குறித்து நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.அதில், லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் பெற்றவர்களை நீக்க வேண்டும் என்றும் மற்றும் தேர்வின் உண்மை மதிப்பெண்கள் வெளிப்படை தன்மையுடன் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு வெளியிட்டவுடன் தங்களது உண்மை மதிப்பெண் அடிப்படையில் பதவி வழங்க வழிவகுக்கு மாறும் கோரியுள்ளனர். அதுமட்டுமின்றி இவ்வாறான ஊழல் முறைகேடு தொடர்ந்து நடைபெறாமல் இருக்க,இனி நடத்தப்படும் தேர்வுக்கான உண்மை மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு என அனைத்திற்கான அறிக்கையை வெளிப்படையாக வெளியிட  அரசுக்கு உத்தரவிடுமாறும் கூறியுள்ளனர்.மேலும் இந்த வழக்கனாது எம்பி மற்றும் எமல்ஏக்கள் மீது போடப்படும் வழக்குகள் விசாரிக்கும் அமர்வுக்கு வந்துள்ளது.இதுகுறித்து அரசு சார்பாக வாதிட்ட வக்கீல் கூறியதாவது,எம்பி மற்றும் எமல்ஏக்கள் மீது போடப்படும் வழக்குகள் தான் இந்த அமர்வில் விசாரணை செய்யப்படும்.

பணி நியமனம் செய்யப்படும் அதாவது பணியாளர் சட்டம் மற்றும் நியமனம் தொடர்பான  வழக்குகளை விசாரிப்பதற்கான சாத்திய கூறுகள் இங்கு இல்லை.அதனால் இந்த வழக்கை இதுதொடர்பான அமர்வில் தான் விசாரணை செய்ய முடியும் என்று கூறியுள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி இது சம்பந்தப்பட்ட அமர்வில் விசாரணை செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.

அவ்வாறு விசாரிக்கும் பட்சத்தில் இந்த வழக்கின் உண்மை தன்மை குறித்து பல தகவல்கள் வெளிவர  உள்ளதாக தெரிவித்துள்ளனர்.அதுமட்டுமின்றி அப்போதைய போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி முக்கிய புள்ளியாக மாட்டவும் அதிக வாய்ப்புள்ளதாகவும்  கூறியுள்ளனர்.

Previous articleஇன்று கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை!
Next articleதிரிஷா ரெஜினா இவங்களுக்கு அப்புறம் விடாமுயற்சியில் இணைந்த மற்றொரு நடிகை!!! அடடா இவங்கதானா அது!!!