பெண்கள் முகத்திற்கு போடப்படும் மேக்கப்!!! இதை ரிமூவ் செய்வதற்கு உதவி செய்யும் 7 இயற்கையான வழிமுறைகள்!!!

0
108
#image_title

பெண்கள் முகத்திற்கு போடப்படும் மேக்கப்!!! இதை ரிமூவ் செய்வதற்கு உதவி செய்யும் 7 இயற்கையான வழிமுறைகள்!!!

பெண்கள் முகத்தை அழகாகக் காட்ட வேண்டும் என்று அதிகளவில் மேக்கப் பயன்படுத்துகிறார்கள். இந்த மேக்கப்பை எவ்வாறு முறையாக முகத்திற்கு போடுகிறோமோ அதே மாதிரி போட்ட மேக்கப்பை முறையாக ரிமூவ் செய்ய வேண்டும்.

அவ்வாறு முகத்திற்கு போட்ட மேக்கப்பை முறையாக முழுவதுமாக ரிமூவ் செய்யவில்லை என்றால் முகத்தில் பல பாதிப்புகளை இது ஏற்படுத்தும். இதனால் முகத்தில் உள்ள மேக்கப்பை ரிமூவ் செய்ய உதவி செய்யும் ஏழு இயற்கையான வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மேக்கப்பை ரிமூவ் செய்ய உதவும் ஏழு வழிமுறைகள்…

ஆவி பிடிப்பது…

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடு செய்ய வேண்டும். தண்ணீர் சூடான பிறகு பின்னர் ஆவி பிடிக்கலாம். இதன் மூலமாக முகத்தில் உள்ள துளைகள் திறக்கப்படும். அதன் பின்னர் அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். எளிமையாக மேக்கப்பை ரிமூவ் செய்யலாம்.

பால்…

பால் மிகவும் பக்க விளைவுகள், பாதிப்புகள் இல்லாத ஒரு இயற்கையான ரிமூவர் ஆகும். இதில் உள்ள லாக்டிக் அமிலம் முகத்திற்கு பல நன்மைகளை தரும். எனவே காய்ச்சாத பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பஞ்சை எடுத்து பாலில் நினைத்து முகத்தில் தேய்க்க வேண்டும். மேக்கப் முழுவதுமாக நீங்கிய பின்னர் வெதுவெதுப்பான நீரினால் கழுவ வேண்டும்.

தேங்காய் எண்ணெய்…

மேக்கப்பை ரிமூவ் செய்வதற்கு தேங்காய் எண்ணெய் சிறந்த ஒரு பொருள் ஆகும். தேங்காய் எண்ணெயில் ஒமேகா 3 சத்துக்கள் உள்ளது. இந்த ஒமேகா 3 சத்துக்கள் சருமத்திற்கு பல நன்மைகளை தருகின்றது. எனவே தேங்காய் எண்ணெயை எடுத்து முகத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலமாக மேக்கப் ரிமூவ் ஆகிவிடும். பின்னர் முகத்தை கழுவி விட்டால் போதும்.

தயிர்…

பாலைப் பாலைவன தயிரும் மேக்கப்பை ரிமூவ் செய்யக் கூடிய முக்கியமான பொருள் ஆகும். பாலைப் போலவே தயிரிலும் லாக்டிக் அமிலம் உள்ளது. இது முகத்தில் உள்ள கலைகளை நீக்குகின்றது. துளைகளை இருக்கவும் பயன்படுகின்றது. ஒரு சிறிய பஞ்சை எடுத்துக் கொண்டு தயிரில் நினைத்து முகத்தில் தேய்க்க வேண்டும். 30 நிமிடங்கள் கழிந்து குளிர்ந்த நீரினால் கழுவினால் மேக்கப் முழுவதுமாக நீங்கும்.

வெள்ளரிக்காய் சாறு…

வெள்ளரிக்காய் சாறும் மேக்கப்பை எளிமையாக ரிமூவ் செய்வதற்கு மிக எளிமையான வழிமுறை ஆகும். வெள்ளரிக்காய் சாறு எடுத்து முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் பல நன்மைகள் கிடைக்கின்றது.

கற்றாழை ஜெல்…

கற்றாழை ஜெல்லை நாம் இயற்கையான மேக்கப் ரிமூவராக பயன்படுத்தலாம். கற்றாழை நமது சருமத்திற்கு பல நன்மைகளை அளிக்கின்றது. சருமம் பளபளப்பாகவும் முகத்தில் ஏற்படும் முகப்பருக்கள் ஆகியவற்றையும் நீக்க பயன்படுகின்றது. கற்றாழை ஜெல்லி எடுத்து முகத்தில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் முகத்தை கழுவி விடலாம்.

ரோஸ் வாட்டர்…

ரோஸ் வாட்டர் சருமத்திற்கு பல நன்மைகளை தருகின்றது. ரோஸ் வாட்டரை நாம் மேக்கப்பை ரிமூவ் செய்வதற்கு சிறந்த ஒரு மேக்கப் ரிமூவராக பயன்படுத்தலாம். ஒரு பஞ்சை எடுத்துக் கொண்டு அதை ரோஸ் வாட்டரில் நினைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவ வேண்டும். இதன் மூலமாக நம் முகத்தில் அடைபட்டு இருக்கும் துறைகளில் இருக்கும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறி விடும். மேலும் இது முகத்தை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவி செய்கின்றது

Previous articleவெறும் 10 நிமிடத்தில் அழுக்கு படிந்த கேஸ் அடுப்பை புதிது போன்று மாற்றி விடலாம்!! இந்த ட்ரிக்கை பயன்படுத்துங்கள்!!
Next article15 நிமிடங்களில் முகம் பளபளப்பாக மாற வேண்டுமா!!? அப்போ கிரீன் டீ ஃபேஸ் பேக் செய்து பாருங்க!!!