15 நிமிடங்களில் முகம் பளபளப்பாக மாற வேண்டுமா!!? அப்போ கிரீன் டீ ஃபேஸ் பேக் செய்து பாருங்க!!!

Photo of author

By Sakthi

15 நிமிடங்களில் முகம் பளபளப்பாக மாற வேண்டுமா!!? அப்போ கிரீன் டீ ஃபேஸ் பேக் செய்து பாருங்க!!!

Sakthi

15 நிமிடங்களில் முகம் பளபளப்பாக மாற வேண்டுமா!!? அப்போ கிரீன் டீ ஃபேஸ் பேக் செய்து பாருங்க!!!

நம் முகத்தை தங்கம் போல வெறும் 15 நிமிடங்களில் பளபளப்பாக மாற்றுவதற்கு கிரீன் டீ பேஸ் பேக் பயன்படுத்தலாம். இந்த கிரீன் டீ பேஸ் பேக்கை எவ்வாறு தயார். செய்வது எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

கிரீன் டீ என்பது நாம் உடல் எடையை குறைத்துக் கொள்ள பயன்படுத்துவோம். இந்த கிரீன் டீயை சருமத்திற்க்கும் நாம் பயன்படுத்தலாம். சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது சருமம் பளபளப்பாக மாறும். மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அனைத்தும் மறையும். இந்த கிரீன் டீ ஃபேஸ் பேக் தயார் செய்ய தேவையான பொருள்கள் பற்றியும் எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

கிரீன் டீ ஃபேஸ் பேக் தயார் செய்ய தேவையான பொருட்கள்…

* கிரீன் டீ பேக்
* கடலை மாவு
* தேன்
* காபி தூள்

செய்முறை…

முதலில் ஒரு சிறிய அளவு பாத்திரம் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் கிரீன் டீ பேக்குகளை போட்டுக் கொள்ளவும். பின்னர் இதில் இந்த கிரீன் டீ பேக் மூழ்கும் அளவிற்கு சூடான தண்ணீர் சேர்த்து கிரீன் டீ பைக்கை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் 15 நிமிடம் கழிந்து கிரீன் டீ பேக்கை எடுத்துவிட்டு அந்த தண்ணீரில் கடலை மாவு, தேன், காபி தூள் அனைத்தையும் சேர்த்து பேஸ்ட் போல தயார் செய்ய வேண்டும். இதோ 15 நிமிடங்களில் முகத்தை பளபளப்பாக மாற்றும் கிரீன் டீ ஃபேஸ் பேக் தயாராகி விட்டது.

இந்த கிரீன் டீ ஃபேஸ் பேக்கை முகத்தில் தேய்க்க வேண்டும். முகத்தில் தேய்த்த பிறகு 15 நிமிடங்கள் கழிந்து முகத்தை கழுவ வேண்டும். அவ்வாறு கழுவினால் முகம் பளபளப்பாக மாறும். மேலும் முகம் வலுவலுப்பு தன்மை பெறும்.