ஊழலால் வந்த 600 கோடி பத்தல 1000 கோடி தான் வேண்டும்!! அம்பலமான அண்ணாமலையின் பக்கா பிளான்!!
பாஜக அண்ணாமலை மீது தொடர்ந்து பல குற்றசாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது தமிழர் முன்னேற்றப்படை தலைவி வீரலட்சுமி இவர் மீது ஊழல் புகார் அளித்துள்ளார். தமிழர் முன்னேற்ற படை வீரலட்சுமி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சமீபத்திய பரபரப்பு செய்தியாக இருந்த சீமான் விஜயலட்சுமி விவகாரத்தில் இவர்தான் முக்கிய புள்ளி என்று கூட கூறலாம்.
சீமானை எதிர்த்து விஜயலட்சுமிக்கு ஆதரவு அளிப்பதாக குரல் கொடுத்து உதவி செய்து வந்த நிலையில் இறுதியில் அவர்களுக்குள்ளேயே மோதல் ஏற்பட்டது. தற்பொழுது விஜயலட்சுமி இந்த விவகாரத்தில் இருந்து வாபஸ் பெற்று பின்வாங்கிய நிலையில் வீரலட்சுமி பார்வையானது அண்ணாமலை பக்கம் திரும்பி உள்ளது. அதாவது அண்ணாமலை ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது, அண்ணாமலை அவர்கள் மகளிர் அணி பொருளாளர் மாலினி மற்றும் பாஸ்கர் உடன் இணைந்து தற்போது வரை 600 கோடிக்கும் மேற்பட்ட சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார். இதனின் முக்கிய குற்றவாளியே அண்ணாமலை தான். ஏனென்றால் சென்னையில் இருந்து பெங்களூருக்கு போடப்படும் விரைவு சாலையில் கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் அளவிற்கு அண்ணாமலை ஊழல் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இவர்களின் திட்டத்தை தவிடுபொடியாக்கவே தற்பொழுது அவர் மீது புகார் அளித்துள்ளோம். இதற்கு முன்பும் அண்ணாமலை மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்த பொழுது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.மேற்கொண்டு ஊழல் நடக்காமல் இருக்கவே தற்பொழுது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நான் அண்ணாமலை மீது புகார் அளித்துள்ளதால் பலர் தனது வீட்டில் மது பாட்டில்களை வீசி வருகின்றனர்.
இவ்வாறு செய்வதினால் தனக்கோ அல்லது தன் குடும்ப உறுப்பினர்களுக்கோ ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் அதற்கு முக்கிய காரணம் அண்ணாமலை தான் என கூறியுள்ளார்.இவ்வாறு இருக்கையில் வீரலட்சுமி புகார் அளித்ததை குறித்து அண்ணாமலையிடம் நிரூபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அண்ணாமலை சிறுத்தபடியே, எனக்கு வீரலட்சுமி என்ற யாரையும் தெரியாது. சுதந்திரப் போராட்டத்திற்காக போராடிய வீரலட்சுமி மட்டும்தான் எனக்கு தெரியும். அவரை தவிர வேற எந்த ஒரு வீரலட்சுமி, சூர லட்சுமி, பங்காரு லட்சுமி என்றெல்லாம் எனக்கு தெரியவே தெரியாது என கேலியாக கூறினார்.
மேலும் என் மீது யார் வேண்டுமானாலும் ஊழல் ரீதியான புகார் அளிக்கலாம் அது குறித்து உண்மை ஆதாரங்கள் இருந்தாலும் வெளியிடட்டும் என தெரிவித்தார். அண்ணாமலையின் இந்த பேச்சைப் பார்க்கையில் வீரலட்சுமி அளித்த புகார் இம்முறையும் கிடப்பில் தான் போடப்படும் என்று தெரிய வருகிறது.