மாணவர்களுக்கு அதிரடி சலுகையை வழங்கிய பிரபல பொழுதுபோக்கு நிறுவனம்!! இனிமேல் விடுமுறையை ஜாலியா கொண்டாடலாம்!!

0
48
Famous entertainment company that gave action offer to students!! Now let's celebrate the holidays with fun!!
Famous entertainment company that gave action offer to students!! Now let's celebrate the holidays with fun!!

மாணவர்களுக்கு அதிரடி சலுகையை வழங்கிய பிரபல பொழுதுபோக்கு நிறுவனம்!! இனிமேல் விடுமுறையை ஜாலியா கொண்டாடலாம்!!

பிரபல பொழுதுபோக்கு பூங்காவான வொண்டர்லா மாணவர்களுக்கு நுழைவு கட்டணத்தில் அதிரடி தள்ளுபடியை வழங்கியுள்ளது.

வொண்டர்லா தனது 18ஆவது ஆண்டு நிறைவு விழாவைஇந்தியாவின் கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத், உள்பட முக்கிய நகரங்களில் மக்களின் பொழுது போக்கிற்காக வொண்டர்லா எனப்படும் பொழுதுபோக்கு பூங்கா செயல்பட்டு வருகிறது. இது தற்போது தமிழ்நாட்டில் சென்னையிலும் திருப்போரூரில் துவங்கப்பட உள்ளது.

அதுமட்டுமில்லாமல் பெங்களூரில் உள்ள வொண்டர்லா பூங்காவின் அருகில்  வொண்டர்லா ரிசார்ட் என்ற விருந்தினர் மாளிகையும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல அம்சங்கள் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கென உள்ள சாதனங்கள் பலவற்றை ஒண்டர்லா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ளது.

 கொண்டாடுவதை தொடர்ந்து இந்த கட்டண சலுகையை அறிவித்துள்ளது.

ஒவ்வொரு விடுமுறையின் போதும் குழந்தைகளை பெற்றோர்கள் பூங்காக்களுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். இதில் பலரின் விருப்பமாக இருப்பது வொண்டர்லா. இந்த பூங்காவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் கண்டு களிக்கும் வகையில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த சூழ்நிலையில் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் மற்றும்  1 8 -ஆம் ஆண்டு தொடக்க விழா வர இருப்பதால் 22 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு  வொண்டர்லா நிறுவனம் அதிரடி சலுகையாக அவர்களின் நுழைவு கட்டணத்தில் 20% தள்ளுபடியை வழங்கியுள்ளது.

விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் தேர்வு செய்யும் ஒண்டர்லா ஹாலிடேஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொழுதுபோக்கு பூங்காவில் எல்லா வயதினரும் கண்டு களித்து மகிழலாம். இதில் மேலும் வாடிக்கையாளர்கள் மகிழ்வுறும் விதமாக சிறப்பு சலுகையாக 22 வயதிற்கு கீழே உள்ள மாணவர்களுக்கு தற்போது நுழைவு கட்டணத்தில் 20% தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

இந்த சலுகைகளை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் பெங்களூரு ஹைதராபாத் மற்றும் கொச்சி பூங்காக்களின் நுழைவு கட்டணத்தில் தள்ளுபடி பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் மாணவர்களின் நுழைவு கட்டண தள்ளுபடி சலுகைக்கு ஒண்டர்லா இணையதளத்தை சலுகையைப் பெற்றுக் கொள்ளலாம். மாணவர் நுழைவு கட்டண சலுகைக்கான இணையதள முகவரி,

visit https://www.wonderla.com/offers/20-off-for-college-students.html

அதேபோல் வொண்டர்லா பூங்காவிற்கு செல்ல நுழைவுச்சீட்டைப் பெற முன்பதிவு செய்வதற்கான இணையதள முகவரி,

 https://bookings.wonderla.com/.

மேலும் விவரங்களுக்கு

பெங்களூரு: +91 80372 30333, +91 80350 73966.

ஹைதராபாத்:  08414676333, +91 91000 63636

கொச்சி: 0484-3514001, 75938 53107

என்ற எண்களுக்கு அழைக்கவும்.

இந்தியா மற்றும் ஆசியாவிலேயே மிகுந்த வரவேற்பினை வாடிக்கையாளரிடம் பெற்றுள்ள பொழுதுபோக்கு பூங்காவான வொண்டர்லாவிற்கு இதுவரை சுமார் 3.9 கோடி வாடிக்கையாளர்கள் வருகை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.