புதிதாக 8 வைரஸ்!! பயோ வார்? உலக நாடுகளுக்கு அடுத்த ஆபத்தை கொடுக்க காத்திருக்கும் சீனா!!
கடந்த 2019 ஆம் ஆண்டு உலக மக்களுக்கு மறக்க முடியாத ஒரு ஆண்டாக வரலாற்றில் பதிந்து விட்டது. காரணம் கொரோனா என்ற வைரஸ் தொற்று. இந்த வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பரில் முதன் முதலில் சீனாவின் ஊகான் மாகாணத்தில் உள்ள மார்க்கெட் ஒன்றில் உருவாகி மெல்ல மெல்ல பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் பாதிப்பால் சீனாவில் தினமும் 100 பேருக்கு மேல் இறக்க தொடங்கினர். இந்த செய்தி காட்டு தீ போல் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. சீனாவின் அண்டை நாடுகள் வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மக்களை காப்பற்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டும் பயனில்லாமல் போனது. கண்ணுக்கு தெரியாத இந்த வைரஸால் வல்லரசு நாடுகளே ஆட்டம் கண்டது.
இந்த கொரோனா (கோவிட் 19) வைரஸ் உலகம் முழுவதும் பரவி 70 லட்சம் பேரை காவு வாங்கியது. இந்த வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்ப காலங்களில் கடும் கட்டுப்பாடுகள் போடப்பட்டு மக்கள் அதை தீவிரமாக கடைபிடித்ததால் வைரஸ் தாக்கம் கட்டுக்குள் இருந்தது. அதன் பின் D614G என்ற மரபணு மாற்றத்தோடு உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது. இது கொரோனவை காட்டிலும் பல மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டிருந்ததால் லட்சக்கணக்கான மக்களை பாதித்து உயிர்கொல்லி வைரஸாக தோன்றியது.
அதேபோல் தென் ஆப்ரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா உருமாறி புது வைரஸாக தோன்றி மக்களை ஆட்டி படைத்து விட்டது என்று சொல்லலாம்.
கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலை என்று அடுத்தடுத்து வைரஸ் தாக்கம் தொடர்ந்து கொண்டே இருந்ததால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டது. அதேபோல் வர்த்தகம் முழுவதும் பாதிக்கப்பட்டதால் வல்லரசு, வளர்ந்த நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் என உலகில் உள்ள மொத்த நாடுகளும் பொருளாதார ரீதியாக கடும் சரிவை சந்தித்தது.
இதனால் உணவுப் பொருட்கள் முதல் அத்தியாவசிய பொருட்கள் என்று அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியது. இதன் காரணமாக விலைவாசி உச்சத்திற்கு சென்று ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கியது.
அதன் பின் கொரோனா தாக்கம் குறைந்து மக்கள் இயல்பு வாழக்கைக்கு திரும்பினார். தற்பொழுது கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார இழப்பை மீட்கும் முயற்சியில் உலக நாடுகள் மேற்கொண்டு வரும் நிலையில் சீனாவில் புதிதாக 8 வைரஸ்கள் உருவாகி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இது கொரோனவை விட பல மடங்கு ஆபத்து நிறைந்தவை என்று அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருப்பது உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான் உலக நாடுகளுக்கு பரவியது என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது புதிதாக எட்டு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வைரஸ்கள் அனைத்தும் மனிதர்களை தாக்கும் திறன் கொண்டது என்றும் அதில் SARS-CoV-2 என்பது கொரோனா குடும்பத்தை சேர்ந்த வைரஸ் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
மேலும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 8 வைரஸ்களின் தீவிரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களின் இந்த தகவலால் தற்பொழுது உலக நாடுகள் அச்சத்தில் இருக்கிறது.