ஓடிடியில் வெளியாகும் லியோ திரைப்படம்!!! இணையத்தில் பரவும் தகவல்கள்!!!

0
120
#image_title

ஓடிடியில் வெளியாகும் லியோ திரைப்படம்!!! இணையத்தில் பரவும் தகவல்கள்!!!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவான நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியானது. முதல்வரின் 148 கோடி ரூபாய் உலக அளவில் வசூல் செய்து லியோ திரைப்படம் சாதனை படைத்துள்ளது

லியோ திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக லலித் குமார் அவர்கள் தயாரித்துள்ளார். மேலும் ராக்ஸ்டார் அனிருத் லியோ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்பொழுது வரை திரையரங்குகளில் லியோ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் லியோ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்து தகவல்கள் பரவி வருகின்றது. அவ்வாறு ஓடிடியில் வெளியாகும் என்று பரவி வரும் லியோ திரைப்படம் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் கிடையாது. அமெரிக்கா நாட்டை சேர்ந்த அனிமேஷன் திரைப்படமான லியோ திரைப்படம் ஆகும்.

அமெரிக்கா நாட்டை சேர்ந்த அமெரிக்க படமான லியோ திரைப்படத்தை இயக்குநர்கள் ராபர்ட் மரியநெட்டி, ராபர்ட் ஸ்மிகெல், டேவிட் வாச்டென்ஹெய்ம் ஆகியோர் இணைந்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளனர். ஜியோப் ஜனெலி இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

லியோ திரைப்படத்தில் நடிகர் ஆடம் சான்ட்லெர் லியோ கதாப்பாத்திரத்திற்க்கு வாய்ஸ் கொடுத்துள்ளார். மேலும் பல நடிகர்கள் இந்த அனிமேஷன் திரைப்டத்திற்காக வாய்ஸ் கொடுத்துள்ளனர். இந்நிலையில் லியோ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி வரும் நவம்பர் மாதம் 21ம் தேதி நேரடியாக நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபுதிதாக 8 வைரஸ்!! பயோ வார்? உலக நாடுகளுக்கு அடுத்த ஆபத்தை கொடுக்க காத்திருக்கும் சீனா!!
Next articleடீ வைக்க சென்ற இளம்பெண்!!! தீ பிடித்து உடல் கருகி பலியான சோகம்!!!