சிம்பிள் ரெசிபி: கேரளா ஸ்டைல் “நேந்திரம் பழ சாண்ட்விட்ச்” – செய்வது எப்படி?

0
80
simple-recipe-kerala-style-nendram-fruit-sandwich-how-to-make-it
simple-recipe-kerala-style-nendram-fruit-sandwich-how-to-make-it

சிம்பிள் ரெசிபி: கேரளா ஸ்டைல் “நேந்திரம் பழ சாண்ட்விட்ச்” – செய்வது எப்படி?

நேத்திரம் வாழை கேரளாவில் விளையக் கூடிய பழ வகை ஆகும். இந்த பழத்தில் சிப்ஸ், வறுவல், கறி, குழம்பு என பல உணவு வகைகள்செய்து உண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேந்திரம் பழத்தை வைத்து சுவையான மற்றும் ஆரோக்கியமான சாண்ட்விட்ச் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*நேந்திரம் பழம் – 1

*பொடித்த வெல்லம் – ஒரு கப்

*தேங்காய் துருவல் – ஒரு கப்

*ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை

*நெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:-

Nenthram Pazham Sandwich Recipe in Tamil

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு கப் பொடித்த வெல்லம் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வெல்லம் கரைந்து வரும் வரை சூடாக்கி அடுப்பை அணைக்கவும்.

பின்னர் அடுப்பை அணைத்து இந்த வெல்லக் கரைசலை ஒரு பாத்திரத்திற்கு வடிகட்டிக் கொள்ளவும். இந்த வெல்லக் கரைசலில் 2 தேக்கரண்டி நெய் மற்றும் சிட்டிகை அளவு ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும். அடுத்து 1/2 மூடி தேங்காயை துருவல் கொண்டு துருவிக் கொள்ளவும். இதை அந்த வெல்லக் கரைசல் பாத்திரத்தில் போட்டு கொள்ளவும்.

இந்த பாத்திரத்தை அடுப்பி வைத்து மிதமான தீயில் கிளறி விடவும். பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

பின்னர் நேந்திரம் பழத்தை எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும். பின்னர் அதை நீள வாக்கில் இரண்டாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாதி வாழைப்பழத்தில் தயார் செய்து வைத்துள்ள தேங்காய் கலவையை தடவிக் கொள்ளவும். மேலே இன்னொரு பாதி நேந்திர வாழைப் பழத்தை வைத்து மூடி சாண்ட்விச் போல் செய்து கொள்ளவும். இவ்வாறு செய்தால் ஹெல்தி சாண்ட்விச் தயார்.