வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கும் பாகிஸ்தான்!!! இடம் கொடுக்குமா தென்னாப்பிரிக்க அணி!!!
இன்று(அக்டோபர்27) நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவுடன் விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி இந்த லீக் சுற்றில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு செல்லும் முனைப்பில் விளையாடவுள்ளது.
நடப்பு உலகக் கோப்பை தொடர்பு கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கியது. இந்த தொழில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் வங்கதேசம் ஆகிய 10 அணிகள் விளையாடி வருகின்றது.
இந்நிலையில் இன்று(அக்டோபர்27) நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் பாபர் அம் தலைமையிலான பாகிஸ்தான் அணி எய்டன் மார்க்ரம் அவர்களின் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியை எதிர் கொள்கின்றது.
பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மீதும் இந்த போட்டி இன்று(அக்டோபர்27) மதியம் 2 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகின்றது.
பாகிஸ்தான் அணி விளையாடிய 5 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றியும் 3 தோல்விகளும் பெற்றுள்ளது. மறுபக்கம் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா விளையாடிய 5 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வி பெற்று 4 போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இன்று(அக்டோபர்27) நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணியில் அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெற முடியும். எனவே பாகிஸ்தான் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்போடு களமிறங்கவுள்ளது.
மறுபுறம் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணி இன்றைய போட்டியில் வெற்றி. பெறும் பட்சத்தில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு செல்லும். எனவே இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.