ஐந்து போட்டியாளர்கள் உள்ளே இரண்டு போட்டியாளர்கள் வெளியே! எதிர்பாராததை எதிர் பாருங்கள்!!
பிக்ப்ஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று(அக்டோபர்29) ஐந்து புதிய போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியில் உள்ளே சொல்லவுள்ள நிலையில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கியது. தொடங்கிய முதல் நாளில் இருந்தே பிக்பாஸ் 7 நிகழ்ச்சி சண்டையும் சச்சரவாகும் மிக பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரதீப், விஷ்ணு, யுகேந்திரன், மாயா கிருஷ்ணன், பூர்ணிமா, விஜய் வர்மா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், சரவணவிக்ரம், விசித்ரா, ரவீனா, மணிச்சந்த்ரா, கூல் சுரேஷ் உள்பட 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார். இதுவரை அனன்யா ராவ், விஜய் வர்மா ஆகியோர் வீட்டை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில் பவா செல்லதுரை அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் ரசிகர்களின் கவனம் வைல்ட் கார்டு என்ட்ரி மேல் திரும்பியது. அதாவது எப்பொழுது வைல்ட் கார்ட் என்ட்ரி மூலமாக எப்பொழுது போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவார்கள் என்று எதிர்பார்ப்புக்கு கமல்ஹாசன் அவர்கள் கடந்த வாரம் “பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் அக்டோபர் 29ம் தேதி 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலமாக உள்ளே நுழையவுள்ளார்கள்” என்று கூறினார்.
அதன்படி இன்று(அக்டோபர்29) வைல்ட் கார்ட் என்ட்ரி மூலமாக பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் செல்லவுள்ளனர். அதன்படி விஜய் டிவி நட்சத்திரங்களான அன்ன லட்சுமி, நடிகை அர்ச்சனா, கன்டன்ட் கிரியேட்டர் விஜே பிராவோ, பாடகர் கானா பாலா, நடிகர் தினேஷ் கோபால்சாமி ஆகியோர் உள்ளே நுழையவுள்ளனர். அதே போல இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் பறக்கும் வீட்டிலிருந்து இந்த வாரம் வினுஷா மற்றும் யுகேந்திரன் இருவரும் எலிமினேட் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் தற்பொழுது வெளியாகி புரோமோவில் நடிகர் கமல்ஹாசன் அவர்களும் “இந்த வாரம் உள்ளே செல்லும் நபர்கள் 5 பேர் அப்படியென்றால் வெளியே செல்லக்கூடிய நபர்கள்” என்று கூறி இரண்டு எவிக்சன் கார்டுகளை கிழித்து எதிர்பாராதது எதிர்பாருங்கள் என்று கூறி செல்கின்றார். இதனால் இந்த வாரம் இரண்டு எவிக்சன் என்பது உறுதியாகிவிட்டது.