விளம்பரம் வேண்டுமா வேண்டாமா! பயனர்களுக்கு இரண்டு சாய்ஸ் கொடுத்த எலான் மஸ்க் 

0
40
#image_title
விளம்பரம் வேண்டுமா வேண்டாமா! பயனர்களுக்கு இரண்டு சாய்ஸ் கொடுத்த எலான் மஸ்க்
எக்ஸ் செயலியையும் எக்ஸ் வலைதளத்தையும் பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அவர்கள் இரண்டு புதிய தேர்வு முறைகளை கொடுத்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள மக்களால் டுவிட்டர் செயலி பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் டுவிட்டர் செயலியை எலான் மஸ்க் அவர்கள் கைப்பற்றி அதற்கு எக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்து லோகோவையும் மாற்றினார். மேலும் புதிய புதிய அப்டேட்டுகளை வழங்கி வரும் எலான் மஸ்க் தற்பொழுது மேலும் புதிய வசதிகளை பயனர்களுக்காக அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
அதாவது தற்பொழுது எக்ஸ் தளத்தில் மேலும் இரண்டு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே உள்ள திட்டத்துடன் சேர்த்து பிரீமியம் பிளஸ், பேசிக் பிளான் என்று இரண்டு புதிய வசதிகளை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தி உள்ளார். அதன் படி பிரீமியம் பிளஸ் திட்டத்தில் பயனர்கள் எக்ஸ் வலைதளம் அல்லது செயலி எது பயன்படுத்தினாலும் அவர்களுக்கு விளம்பரம் காட்டப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயனர்கள் பேசிக் பிளான் சந்தாவை வாங்கினால் அவர்களுக்கு விளம்பரம் காட்டப்படும் என்றும் இதனுடன் பதிவுகளை எடிட் செய்வது, கஸ்டமைசேசன் அம்சங்கள், எஸ்.எம்.எஸ் ஆப்சன்கள் ஆகியவை வழங்கப்படும். ஆனால் புளூ டிக்,  கிரைண்டர் ஆப்சன்கள் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பேசிக் சந்தாவை பயனர்கள் 243 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
மேலும் பயனர்கள் எக்ஸ் பக்கத்தை பயன்படுத்தும் பொழுது விளம்பரங்கள் வரக்கூடாது என்று நினைத்தால் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள பிரீமியம் பிளஸ் சமந்தாவை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இதில் விளம்பரங்கள் காட்டப்படாது என்றும் மற்ற சந்தா முறைகளில் வழங்கப்படும் அனைத்து அம்சங்களும் இதில் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அது மட்டுமில்லாமல் தற்பொழுது வழங்கப்படும் 650 ரூபாய் மதிப்பிலான சமந்தாவை பெற்றால் இதில் புளூ டிக், கஸ்டமைசேசன் ஆப்சன்கள், பதிவுகளை எடிட் செய்வது போன்ற பல வசதிகள் வழங்கப்படும்.
எனவே தற்போது எக்ஸ் செயலில் பயன்படுத்தும் பயனர்கள் பேசிக் பிளான், பிரீமியம் பிளஸ், தற்பொழுது வழங்கப்பட்டு வரும் 650 ரூபாய் சந்தா ஆகிய மூன்று சந்தாக்களில் எதையாவது ஒன்றை தேர்வு செய்து பயன்படுத்தலாம் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.