டிசம்பர் மாதம் முதல் 4ஜி சேவை! பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவிப்பு!!

0
48
#image_title

டிசம்பர் மாதம் முதல் 4ஜி சேவை! பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவிப்பு!!

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தங்களுடைய 3ஜி நெட்வொர்க்கை 4ஜி நெட்வோர்க்காக மாற்றபடவுள்ளதாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது.

இந்தியாவில் ஏர்டெல், ஜியோ, விஐ, பி.எஸ்.என்.எல் ஆகிய நான்கு நெட்வொர்க் நிறுவனங்கள் தொலைதொடர்பு நெட்வொர்க் மற்றும் இணைய சேவையை வழங்கி வருகின்றது. இதில் ஏர்டெல், ஜியோ, வகை ஆகிய நிறுவனங்கள் 4ஜி சேவையையும், ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கும் முனைப்பிலும் தற்பொழுது செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தொலைதொடர்பு சேவையை வழங்குவதில் தொன்றுதொட்டு இயங்கி வரும் பி.எஸ்.என்.எல் படிப்படியாக தங்களது சேவைகளை விரிவுபடுத்தி வருகின்றது. அந்த வகையில் நாடு முழுவதும் தற்பொழுது பி.எஸ்.என்.எல் நிறுவனம் 3ஜி சேவை நாடு முழுவதும் முழுமையாக கிடைக்கும் படி தொலை தொடர்பு சேவையை வழங்கி வருகின்றது.

இந்நிலையில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகம் செய்வது பற்றியும் 5ஜி சேவையை அறிமுகம் செய்வது பற்றியும் முக்கியமான அறிவிப்பை பி.எஸ்.என்.எல் நிறுவனத் தலைவர் பி.கே புர்வார் அவர்கள் தற்பொழுது கூறியுள்ளார்.

இது குறித்து பி.எஸ்.என்.எல் நிறுவனத் தலைவர் பி.கே.புர்வார் அவர்கள் “பி.எஸ்.என்.எல் நிறுவனம் தன்னுடயை 4ஜி சேவையை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. அதுமட்டுமில்லாமல் 2024ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நாடு முழுவதும் 4ஜி சேவையை விரிவுபடத்தப்படவுள்ளது. 4ஜி சேவையை செயல்படுத்திய பிறகு 5ஜி நெட்வொர்க் சேவையை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.

அதாவது 4ஜி சேவை ஜூன் மாதத்திற்குள் செயல்படுத்தப்பட்ட பிறகு 4ஜி சேவையை 5ஜி சேவையாக மாற்றுவதற்கும் திட்மிட்டுள்ளோம்” என்று பி.எஸ்.என்.எல் நிறுவன தலைவர் பி.கே புர்வார் அவர்கள் கூறியுள்ளார்.