நம்மளால் வாழ்ந்துட்டு நம்மளையே ஒருத்தன் இன்னைக்கு பேசுறான்! பாஜகவை வறுத்தெடுத்த செல்லூர் ராஜு!!

0
181
#image_title

நம்மளால் வாழ்ந்துட்டு நம்மளையே ஒருத்தன் இன்னைக்கு பேசுறான்! பாஜகவை வறுத்தெடுத்த செல்லூர் ராஜு!!

கடந்த சில வாரங்களாக தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. வருகின்ற நாடாளுமனற தேர்தலுக்காக இப்பொழுதே அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது.

அதிமுக – பாஜக கூட்டணி சில கருத்து முரண்பாடு காரணமாக கடந்த மாதம் முறைந்தது. இனி பாஜகவுடன் எப்பொழுதும் கூட்டணி இல்லை என்று அதிமுக தலைமை அறிவித்துவிட்டது. அதிமுகவின் இந்த அதிரடி முடிவு அனைவருக்கும் ஷாக்களிக்கும் ஒன்றாக இருந்தது. பாஜகவை விட திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சியில் நிர்வாகிகளுக்கு தான் அதிமுகவின் முடிவு பேர் இடியாக வந்து விழுந்தது. காரணம் தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு அலை இருபதால் அக்கட்சியுடன் கூட்டணி வைத்தால் அதிகாவிற்கான சிறுபான்மையினரின் ஓட்டு எப்படியும் திமுகவுக்கு தான் வந்து சேரும் என்று பகல் கனவு கண்டு கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் எடப்பாடியர் சுதாரித்துக் கொண்டு பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்தை முன் வைத்தனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைத்ததால் தான் சிறு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக ஆட்சியை இழந்தது. இந்த தவறை நாடாளுமன்ற தேர்தலில் செய்த விடக் கூடாது என்பதை உணர்ந்து பாஜகவை எடப்பாடியர் கழட்டி விட்டார் என்பது ஒரு தரப்பினர் கருத்தாக உள்ளது.

பாஜக உடனான கூட்டணி முறிவிற்கு பிறகு எடப்பாடியரின் நடவடிக்கைகள் மற்ற கட்சியினருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறது. பாஜக உடனான கூட்டணி முறிவை உறுதிப்படுத்திய அவர் இழந்த சிறுபான்மையின மக்களின் ஓட்டுக்களை திரும்ப பெரும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் நீண்ட காலமாக சிறை வாசம் அனுபவித்து வரும் இஸ்லாமியர்களை விடுவிக்க சிறப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இது இஸ்லாமியர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் எடப்பாடியரை சந்தித்து நன்றி தெரிவித்ததோடு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன்’இணைந்து தேர்தலை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தனர்.

அதுமட்டும் இன்றி ஏற்கனவே கூட்டணியில் இருந்த பாமக, விசிக, தேமுதிக உடன் கூட்டணி வைக்க அதிமுக தலைமை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இவ்வாறு எடப்படியார் அடுத்த அடுத்த ஆக்சனை ஒருபுறம் நிகழ்த்தி வரும் நிலையில் மறுபுறம் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தங்களது பங்கிற்கு பாஜகவையும், திமுகவையும் வறுத்தெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் மதுரையில் நடைபெற்ற அதிமுகவின் 52 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமை தாங்கி பேசினார். அப்பொழுது ஐயையோ பாவம் என்று ஒருத்தனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினால் அவன் நம்ம காதையே கடிக்கின்றான். அவனை சும்மா விடலாமா? என்று தமிழக பஜகவையும் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலையும் சாடி பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் உள்ள மொத்த ரவுடி கும்பலும் பாஜக மற்றும் திமுகவில் தான் இருக்கிறது என்று கடுமையாக தாக்கி பேசினார். போனா போகுதுனு தூக்கி வச்சி கொண்டாடிய பாஜகாவல் அதிமுக ஆட்சியை இழந்தது தான் மிச்சம். 2 லட்சம் ஓட்டு மட்டும் சேர்த்து வாங்கி இருந்தோம் என்றால் இன்னைக்கு தமிழகத்தில் அதிமுக ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கும். பாஜகவால் தான் ஆட்சி பறி போனது என்பதை வெளிப்படையாக கூறினார்.

ஆட்சிக்கு வந்தவுடன் ரேசன் கார்டு வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவோம் என்று கூறி திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 கிடைத்திருக்க? பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சியை பிடித்த திமுக ஒருமுறை மட்டுமே ஆட்சி பொறுப்பை வகிக்க முடியும். அதேபோல் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மாணவச் செல்வங்களின் மனதில் ஆசையை ஏற்படுத்திவிட்டு இன்று அனைவருக்கும் நாமத்தை போட்டு வருகிறது இந்த திமுக அரசு. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக மீண்டும் நீட் கையெழுத்து இயக்கம் என்ற புதிதாக ஒரு ட்ராமாவை திமுக கட்சி செய்து வருகிறது.

தற்பொழுது மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்ற பெயரில் சில பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் நிறுத்தப்பட்டு விடும் என்பது தான் உண்மை. கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்றார் திரு.ஸ்டலின் அவர்கள். ஆனால் அவர் சொன்னபடி வாக்குறுதியை நிறைவேற்றினாரா? இப்படி பொய்யான வாக்குறுதிகளை அள்ளி தெளித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுகவிற்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தக்க பாடத்தை மக்கள் புகுட்ட வேண்டும்.

திமுக அரசு மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்று பெயரளவில் ரூ.1000 வழங்கி வருகிறது. எடப்பாடியார் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.2000 வழங்குவார் என்று தெரிவித்தார். இந்நிலையில் தற்பொழுது செல்லூர் ராஜு அவர்களின் பேச்சு அனைவரின் மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Previous articleயாருக்கும் எந்த பரிசுத் தொகையும் நான் அறிவிக்கவில்லை! ரத்தன் டாட்டா எக்ஸ் பக்கத்தில் பதிவு !!
Next articleபிரேமம் பட இயக்குநர் எடுத்த திடீர் முடிவு! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!!