உங்களை வண்டு கடித்து விட்டதா! அப்போ உடனே இதை செய்யுங்க !!

0
80
#image_title
உங்களை வண்டு கடித்து விட்டதா! அப்போ உடனே இதை செய்யுங்க
நம்மை ஒரு சில சமயங்களில் வண்டுகள் கடித்து விடும். வண்டுகள் கடித்து விட்டால் வண்டுக் கடியால் என்ன ஆகப் போகின்றது என்று நாம் அதை அப்படியே விட்டு விடுவது உண்டு. ஆனால் வண்டுக் கடியை அவ்வாறு சாதாரணமாக விட்டுவிடக் கூடாது.
வண்டு கடித்துவிட்டால் தோல் சிவந்து தடிக்க தொடங்கும். இதை அப்படியே விட்டால் இரத்தத்தில் நச்சுத் தன்மை கலந்து ஒரு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இந்த பாதிப்புகளை உடனே குணப்படுத்த ஒரு சில மூலிகை பொருட்களை பொடியாக செய்து பயன்படுத்தலாம்.
இந்த மூலிகை பொருட்களை பயன்படுத்தி வண்டுகள் மற்றும் பிற பூச்சிக் கடிகளால் ஏற்படும் தடிப்பு, சிவப்புத் தன்மை ஆகியவற்றை உடனே குணப்படுத்தலாம். அந்த மூலிகை பொருட்கள் என்னென்ன எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வண்டுக் கதியை குணப்படுத்த தேவையான பொருட்கள்…
* குப்பை மேனி
* புதினா
* வல்லாரை
* கொத்தமல்லி
* கஸ்தூரிமஞ்சள் தூள்
* சீகைக்காய் தூள்
செய்முறை…
முதலில் குப்பைமேனி, புதினா, வல்லாரை, கெங்கவல்லி ஆகிய இலைகளை வெயிலில் காய வைக்க வேண்டும். அதன். பின்னர் இதை பொடியாக்கி ஒரு காற்று புகாத பாட்டிலில் வைத்து மூடிக் கொள்ளவும். இந்த பொடியை நாம் எப்போதெல்லாம் விஷப்பூச்சிகள், வண்டுகள் கடிக்கின்றதோ அப்பொழுது எல்லாம் பயன்படுத்தலாம்.
இந்த பொடியை சிறிதளவு தண்ணீரில் சேர்த்துக் கொண்டு இதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்சேர்த்து பேஸ்ட் போல தயார் செய்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்டை வண்டு கடித்த இடத்தில் தேய்க்க வேண்டும். இது நன்கு காய்ந்த பிறகு சீகைக்காய் தூள் போட்டு இதை கழுவ வேண்டும்.
இந்த வழிமுறையை நாம் தொடர்ந்து 3 முதல் 5 நாட்கள் வரை செய்து வந்தால் வண்டு மற்றும் பிற விஷப் பூச்சிகளின் நச்சுத் தன்மை வெளியேறி விரைவில் குணமாகும்.