தினமும் புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டுமா! புதினா நீர் செஞ்சு குடிங்க !!

0
49
#image_title
தினமும் புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டுமா! புதினா நீர் செஞ்சு குடிங்க
தினமும் நாம் சோர்வு இல்லாமல் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க நாம் புதினா நீரை குடிக்கலாம். தினமும் காலையில் எழுந்தவுடன் காபி அல்லது தேநீர் அருந்தும் பழக்கம் 100 சதவீத மக்களில் 90 சதவீதம் பேருக்கு இருக்கின்றது.
நாம் அனைவரும் இந்த காபி அல்லது தேநீருக்கு(டீ) அடிமையாகி விட்டோம். காலையில் எழுந்தவுடன் தேநீர்(டீ) அல்லது காபி குடித்தால் தான் அந்த நாள் முழுமையடையும். ஆனால் அதனால் சில பாதிப்புகளும் நமக்கு ஏற்படும்.
இந்த தேநீர் அல்லது காபியை குடிப்பதற்கு பதிலாக தினமும் காலையில் எழுந்தவுடன் புதினா நீர் குடிக்கலாம். புதினா நீர் குடிப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கின்றது. புதினா நீரை காலையில் மட்டும் குடிப்பதோடு நிறுத்தாமல் மாலையிலும் சேர்த்து குடித்து வந்தால் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இதை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* புதினா பொடி
* பால்
செய்முறை
முதலில் புதினா இலைகளை வெயிலில் காயவைத்து அதை பொடியாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த பொடியை ஒரு பாட்டிலில் சேர்த்து அடைத்துக் கொண்டு தேவைப்படும் பொழுது பயன்படுத்தலாம். தற்பொழுது புதினா நீருக்கான முக்கிய பொருள் தயாராகி விட்டது. அடுத்து புதினா நீர் எவ்வாறு செய்வது என்பதை பார்க்கலாம்.
* அடுப்பை பற்ற வைத்து அதில் பாத்திரம் வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சூடு செய்ய வேண்டும்.
* தற்பொழுது சூடு செய்யப்பட்ட வெந்நீரில் இரண்டு ஸ்பூன் புதினா பொடியை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக இதை வடிகட்டி பால் சேர்த்து குடித்து வந்தால் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். தொடர்ந்து இரண்டு வேலை குடித்து வந்தால் நல்ல நோய் எதிர்ப்பு மருந்தாகவும் இது பயன்படுகின்றது.