Kerala Style Recipe: இப்படி செய்தால் “ரைஸ் ரொட்டி” அதிக ருசியாக இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்கள்!

0
98
#image_title

Kerala Style Recipe: இப்படி செய்தால் “ரைஸ் ரொட்டி” அதிக ருசியாக இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்கள்!

ரைஸ் ரொட்டி என்ற உணவு வகை கேரளாவில் மிகவும் பேமஸான ஒரு வகை ஆகும். அரிசி மாவை உருட்டி தவாவில் சப்பாத்தி போல் போட்டு எடுப்பதை தான் “ரைஸ் ரொட்டி” என்று அழைக்கிறார்கள். இவை சிம்பிள் மற்றும் சுவையான ரெசிபி வகைகளில் ஒன்றாகும்.

தேவையான பொருட்கள்:-

*அரிசி மாவு – 1 கப்

*தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

*அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

பின்னர் 1 கப் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கைவிடாமல் மற்றும் கட்டிகள் இல்லாமல் கிளறவும்.

பிறகு அடுப்பை அணைத்து 10 நிமிடம் மூடி போட்டு வைக்கவும். பிறகு இந்த கலவை வெதுவெதுப்பாக இருக்கும் ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும். அடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

அடுத்து சப்பாத்தி மாவு உருட்டுவது போல் ஒவ்வொரு உருண்டையும் உருட்டி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு தோசை தவா வைத்து அவை சூடேறியதும் அடுப்பை குறைவான தீயில் வைத்துக் கொள்ளவும். பின்னர் தயார் செய்து வைத்துள்ள அரசி மாவை போட்டு இரு புறமும் வேகும் வரை விட்டு ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும். இந்த பத்திரிக்கு(ரைஸ் ரொட்டி) வெஜ் குருமா சிறந்த காமினேஷனாக இருக்கும்.

Previous articleவாழ்வில் முன்னேற்றம் காண 30 நாட்களுக்கு மட்டும் இதை செய்யுங்கள்!! அப்புறம் நடக்குற அதிசயத்தை நீங்களே பாருங்க!!
Next articleபேன் தொல்லை? அப்போ வீட்டு வைத்தியத்தை கையில் எடுங்கள்.. ஒரே நாளில் தீர்வு காணுங்கள்!!