வீட்டில் ஒரே கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள்!! ஒரே நாளில் முழுமையான தீர்வு கிடைத்து விடும்!!

0
106
#image_title

வீட்டில் ஒரே கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள்!! ஒரே நாளில் முழுமையான தீர்வு கிடைத்து விடும்!!

வீட்டில் கரப்பான் பூச்சி நடமாட்டம் இருந்தால் நம் உடல் ஆரோக்கியம் விரைவில் கெட்டு விடும். காரணம் இவை சமையலறையில் உள்ள உணவுப் பொருட்களை உண்கின்றன. இதே உணவை நாம் சாப்பிடும் பொழுது உடலில் நுண்கிருமிகள் சென்று பல வித நோய் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். வீட்டில் நடமாடும் கரப்பான் பூச்சி தொல்லைக்கு ஆரம்ப நிலையிலேயே முடிவுக்கு கட்டுவது நல்லது.

கரப்பான் பூச்சியை ஒழிக்க எளியத் தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*பூண்டு – 4 பல்

*புதினா – 10 இலைகள்

*எலுமிச்சம் பழச்சாறு – 3 தேக்கரண்டி

*பிரியாணி இலை – 2

*வினிகர் – 5 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் 10 புதினா இலைகள் சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு பவுலுக்கு வடிகட்டி கொள்ளவும். அடுத்து அரை எலுமிச்சம் பழத்தின் சாற்றை அதில் பிழிந்து கொள்ளவும். அடுத்து 2 பிரியாணி இலையை ஒரு உரலில் போட்டு இடித்து தூள் செய்து கொள்ளவும். இந்த பிரியாணி இலை பொடியை புதினா இலை சாற்றில் சேர்த்து கலந்து விடவும்.

அடுத்து 4 பல் பூண்டை ஒரு உரலில் போட்டு இடித்து அதையும் புதினா சாற்றில் கலந்து கொள்ளவும். பின்னர் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் புதினா சாற்றை ஊற்றிக் கொள்ளவும். அதன் பின் 5 தேக்கரண்டி அளவு வினிகர் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

இதை வீட்டில் கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அவைகள் உடனடியாக வெளியேறி விடும். தினமும் இவ்வாறு செய்து ஸ்ப்ரே செய்து வருவதன் மூலம் கரப்பான் பூச்சி தொல்லை முழுமையாக நீங்கி விடும்.

Previous articleKerala Style Recipe: கேரளா ஸ்டைல் “மீன் மெளலி” – செய்வது எப்படி?
Next articleபாட்டி வைத்தியம்.. எருக்க இலை ஒன்று போதும்!! எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் நிமிடத்தில் பறந்து விடும்!!