ஹாலிவுட் படங்களை மிஞ்சும் சலார் திரைப்படம்! 750 வாகனங்கள் பயன்படுத்தி எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி!!

0
126
#image_title

ஹாலிவுட் படங்களை மிஞ்சும் சலார் திரைப்படம்! 750 வாகனங்கள் பயன்படுத்தி எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி!!

நடிகர் ப்ரபாஸ் நடிக்கும் சலார் திரைப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்று மிகப் பிரம்மாண்டமான முறையில் ஹாலிவுட் திரைப்படங்களை மிஞ்சும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக தற்பொழுது தகவல்கள் கிடைத்துள்ளது.

ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ப்ரபாஸ் அவர்கள் தற்பொழுது சலார் 1 சீஸ் பயர் திரைப்படத்தில் நடித்து நடித்து வருகின்றார். கேஜிஎப், கேஜிஎப் 2 திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீல் அவர்கள் சலார் 1 சீஸ் பயர் திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.

நடிகர் ப்ரபாஸ் நடிக்கும் சலார் 1 சீஸ் பயர் திரைப்படத்தில் நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாரன், ஜெகபதி பாபு, ஸ்ருதிஹாசன், ஈஸ்வரி ராவ் மற்றும் பல நடிகர்கள் நடிக்கின்றனர். கேஜிஎப் திரைப்படங்களையும் சலார் திரைப்படத்தையும் சேர்த்து இயக்குநர் பிரசாந்த் நீல் எடுத்து வருவதாக கூறப்படும் நிலையில் நடிகர் யாஷ் அவர்கள் சலார் திரைப்படத்தில் ராக்கி பாய் கதாப்பாத்திரத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது.

தெலுங்கு, கன்னடா, தமிழ், மலையாளம், ஹிந்தி என்று 5 மொழிகளில் பேன் இந்தியன் திரைப்படமாக சலார் 1 சீஸ் பயர் திரைப்படம் உருவாகி வருகின்றது. சமீபத்தில் சலார் 1 சீஸ் பயர் திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. இந்த சலார் 1 சீஸ் பயர் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 22ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலர் திரைப்படத்தை பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் ப்ரபாஸ் நடிக்கும் சலார் திரைப்படத்தில் இருக்கும் சண்டைக் காட்சிகளில் ஒரு சண்டைக் காட்சி மட்டும் பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது சலார் திரைப்படத்தில் 750 ஜீப்புகள் மற்றும் லாரிகளை பயன்படுத்தி மிகப் பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த சண்டைக் காட்சி ஹாலிவுட் திரைப்படங்களை மிஞ்சும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

Previous articleநடப்பு சேம்பியனை வெளியேற்றிய முன்னாள் சேம்பியன்! 5வது வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா!!
Next articleKerala Style Recipe: சுண்டி இழுக்கும் கேரளா ‘மத்தி மீன் குழம்பு’ – செய்வது எப்படி?