நடப்பு சேம்பியனை வெளியேற்றிய முன்னாள் சேம்பியன்! 5வது வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா!!

0
58
#image_title

நடப்பு சேம்பியனை வெளியேற்றிய முன்னாள் சேம்பியன்! 5வது வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா!!

நடப்பு சேம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நடப்பு உலகக் கோப்பை தொடரில் விட்டு ஆஸ்திரேலிய அணி வெளியேற்றியுள்ளது.

நேற்று(நவம்பர்4) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் 36வது லீக் சுற்றில் நடப்பு சேம்பியன் இங்கிலாந்து அணியும் முன்னாள் சேம்பியன் ஆஸ்திரேலியா அணியும் விளையாடியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மார்னஸ் லபஸ்சக்னே அரைசதம் அடித்து 71 ரன்களும் கிறிஸ் கிரீன் 47 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 44 ரன்களும் சேர்த்தனர். இங்கிலாந்து அணியில் பந்துவீச்சில் சிறப்பாக பந்துவீசிய கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதில் ரஷித், மார்க்வுட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், லிவிங்ஸ்டன், வில்லி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 287 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடங்கியது வீரர் ஜானி பேரிஸ்டோ ஆட்டத்தின் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி எதிர்பார்க்காத அதிர்ச்சியை அளித்தார். ஜோ ரூட் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் அவர்கள் மற்றொரு தொடக்க வீரர் டேவிட் மாலன் அவர்களுடன் இணைந்து ரன் சேர்க்கத் தொடங்கினார்.

டேவிட் மாலன் அரைசதம் அடித்து 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் தொடர்ந்து விளையாடிய பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்து 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய மோயின் அலி 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய மற்ற பேட்ஸ்மென்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

இதனால் நியூசிலாந்து அணி 48.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணியில் ஆடம் சாம்பா 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டோய்னஸ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தன்னுடைய 5வது வெற்றியை பதிவு செய்தது. தொடர்ந்து 6வது தோல்வியை பெற்ற நடப்பு சேம்பியன் இங்கிலாந்து அணி உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கான தகுதியை இழந்து இரண்டாவது அணியாக வெளியேறியது.