Kerala Style Recipe: சுண்டி இழுக்கும் கேரளா ‘மத்தி மீன் குழம்பு’ – செய்வது எப்படி?
மீன் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் நான் வெஜ் வகையாகும். இதில் அதிகளவு ஒமேகா 3 உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து இருப்பதினால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எளிதில் கிடைத்து விடும். இந்த மீனில் ப்ரை, குழம்பு, வறுவல் என பல வெரைட்டி செய்து உண்ணப்பட்டு வருகிறது.
மத்தி மீன் குழம்பு கேரளாவில் பேமஸான ஒன்று ஆகும். இந்த மீன் குழம்பு முறையாக செய்வது எப்படி என்பது குறித்த தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
தேவையான பொருட்கள்:-
*மத்தி மீன் – 1/2 கிலோ
*சின்ன வெங்காயம் – 1/2 கப்
*தேங்காய் எண்ணெய் – 1/2 கப்
*வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
*பச்சை மிளகாய் – 2
*இஞ்சி – 1 துண்டு
*பூண்டு – 10 பற்கள்
*கருவேப்பிலை – 1 கொத்து
*தேங்காய் – 2 துண்டு
*தக்காளி – 2
*மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
*காஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
*கொத்தமல்லி தூள் – 1/2 தேக்கரண்டி
*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
*புளி – 1 எலுமிச்சம் பழ அளவு
*உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் 1 எலுமிச்சம் பழ அளவு புளி போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஊற விடவும்.
பின்னர் 1 துண்டு இஞ்சி எடுத்து தோலை நீக்கி கொள்ள வேண்டும். அதை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுத்து 10 பல் பூண்டு எடுத்து தோலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் தேவையான அளவு சின்ன வெங்காயம் எடுத்து தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடேறியதும் அதில் வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.
பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி எடுக்கவும்.
வெங்காயக் கலவை நன்கு வதங்கி வந்ததும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து சில நிமிடம் வதக்கவும். பிறகு ஊறவைத்துள்ள புளி கரைசலை எடுத்து வதங்கி கொண்டிருக்கும் கலவையில் சேர்க்கவும். அடுத்து 1 கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்க விடவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் 2 தேங்காய் துண்டு மற்றும் தக்காளியை சேர்த்து மைய்ய அரைக்கவும். இந்த விழுதை கொதிக்கும் புளி கலவையில் சேர்க்கவும்.
அடுத்து மத்தி மீன் துண்டுகளை சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும். மீன் வெந்து வந்ததும் வாசனைக்காக கருவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும். இந்த மத்தி மீன் குழம்பை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்.