உங்கள் வாழ்வில் வெற்றி மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்க இந்த மந்திரத்தை சொல்லுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

Photo of author

By Divya

உங்கள் வாழ்வில் வெற்றி மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்க இந்த மந்திரத்தை சொல்லுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

நம் வாழ்வில் வெற்றி, அதிர்ஷ்டம் கிடைப்பது என்பது எளிய காரியம் அல்ல. அதற்கு விடா முயற்சி என்பது மிகவும் முக்கியம். அந்த விடா முயற்சியுடன் சில ஆன்மீக வழிகளை பின்பற்றினால் விரைவில் நாம் தொடங்கவுள்ள காரியம் வெற்றி மற்றும் அதிர்ஷ்டத்தில் முடியும்.

வாழ்வில் வெற்றி மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்க எளிய மந்திரம்:-

இரண்டு சக்தி வாய்ந்த தெய்வங்களின் அருட் கடாக்ஷம் இந்த மந்திரத்தின் மூலம் கிடைக்கப் பெற்று வெற்றி, அதிர்ஷ்டம் – இரண்டையும் தக்க வைக்க முடியும்.

அதாவது, தினமும் காலையில் குளித்தவுடன் விளக்கு ஏற்றி, இந்த மந்திரத்தை 108 முறை 41 நாட்களுக்கு சொல்லி வரவும்.

பின்பு 21 முறை 21 நாட்கள் சொல்லி வரவும். அதன் பின் வெள்ளிக் கிழமையில் 48 முறையும் பௌர்ணமி அமாவாசை தினங்களிலும் மட்டும் 108 முறை சொல்லி வரவும்.

நீங்கள் வெற்றியைத் தொடுவதும் அதிர்ஷ்டத்தைத் தொடுவதும் உங்களுக்கு வழக்கமாக்கி விடும்.

மந்திரத்தின் பெயர் : லட்சுமி கணபதி மந்திரம்

“ஓம் ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம்

கணபதையே வர வரத சர்வ ஜனமே

வசமானய ஸ்வாஹா”

புது தொழில் துவங்கும் முன், புதிய ப்ராஜெக்ட் முயற்சி துவங்கும் போதும் இதை செய்து ஆரம்பிக்கும் போது அத்தனையும் வெற்றியில் அதிர்ஷ்டத்தில் முடிவது உறுதி.