Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் பலாப்பழ வறுவல் – சுவையாக செய்வது எப்படி?

0
44
#image_title

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் பலாப்பழ வறுவல் – சுவையாக செய்வது எப்படி?

நம் அனைவருக்கும் பிடித்த பழங்களில் ஒன்று பலா. இவை அதிக வாசனை மற்றும் சுவையுடன் இருக்கும். பலாப் பழத்தை விட அதன் காயில் பிரியாணி, பொரியல், குழம்பு என்று பல வகை உணவுகள் தயார் செய்து உண்ணப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த பலாக்காயை வைத்து சுவையாக வறுவல் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பலாப்பழ வறுவல் கேரளாவில் பேமஸான உணவு வகைகளில் ஒன்றாகும்.

தேவையான பொருட்கள்:-

*பலாச்சுளை – 10

*எண் ணெய் – பொரிக்க தேவையான அளவு

*உப்பு – தேவையான அளவு

*மிளகாய்த்தூள் – தேவையான அளவு

பலாப்பழ வறுவல் செய்யும் முறை…

பலாச் சுளை சற்று காயாக இருக்கும் நிலையில் 10 என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளவும்.

பலாச் சுளையில் உள்ள கொட்டைகளை நீக்கி தண்ணீர் கொண்டு நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் இதை ஒரு காட்டன் துணி கொண்டு ஈரமில்லாதவாறு சுத்தம் செய்து நீளவாக்கில் மெல்லிய குச்சி போல நறுக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் பொரித்தெடுக்க தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.

எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள பலாச்சுளை துண்டுகளை சேர்த்து பொரித்து எடுத்தெடுக்கவும். பின்னர் இதை ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.

அடுத்து இந்த எண்ணெயில் வறுத்த பலாசுளையில் சிறிதளவு உப்பு மற்றும் சிறிதளவு மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.

இவ்வாறு செய்தால் பலாச்சுளை வறுவல் அதிக வாசனை மற்றும் சுவையுடன் இருக்கும்.