உலகக் கோப்பை தொடரில் அடுத்தடுத்து சாதனை புரியும் விராட் கோலி!! சச்சினின் சாதனையை முறியடித்து அதிரடி!! 

0
165
Virat Kohli will achieve consecutive records in the World Cup series!! Breaking Sachin's record and action!!
Virat Kohli will achieve consecutive records in the World Cup series!! Breaking Sachin's record and action!!

உலகக் கோப்பை தொடரில் அடுத்தடுத்து சாதனை புரியும் விராட் கோலி!! சச்சினின் சாதனையை முறியடித்து அதிரடி!! 

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் விராட் கோலி அதிக ரன் குவித்து சாதனை புரிந்துள்ளார். அவர் சச்சினின் சாதனையை தற்போது முறியடித்துள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் 673 ரன்கள் எடுத்தது ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் என்ற சாதனையாக இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை விராட் கோலி பெற்றுள்ளார். அவர் (674*) ரன்கள் அடித்து சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அரையிறுதிக்கு 4 அணிகள் தகுதி பெற்றன. முதலாவது அரையிறுதி போட்டி இந்தியாவிற்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதில்  டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்தது. இதில் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி சதம் அடித்தனர். தற்போது 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் விராட் கோலி சத்தம் இல்லாமல் இரண்டு சாதனைகளை முறியடித்துள்ளார். முதலாவதாக ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சச்சின் டெண்டுல்கரின் (673 ரன்கள்) என்ற சாதனையை முறியடித்தார்.

இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 674 ரன்கள் இதுவரை எடுத்து சாதனை புரிந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக முறை 50+ ரன்கள்அடித்த வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார்.

ஏற்கனவே நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் 7 முறை சச்சின் டெண்டுல்கர்  (2003), மற்றும் ஷகிப் அல் ஹசன்(2019) ஆகியோர் 50+ ரன்கள் அடித்த சாதனையை முறியடித்து தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் 8- வது முறையாக 50+ ரன்களை கடந்து விராட் கோலி சாதனை புரிந்துள்ளார்.

Previous articleஅதிமுகவின் கொடி மற்றும் சின்னம் பயன்படுத்துவது தொடர்பான வழக்கு! எதுவுமே செய்ய முடியல.. ஓபிஎஸ் குமுறல்!!
Next articleபுகழ்பெற்ற காவிரி திருவிழா உற்சவம்!! நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!!