அதிமுகவின் கொடி மற்றும் சின்னம் பயன்படுத்துவது தொடர்பான வழக்கு! எதுவுமே செய்ய முடியல.. ஓபிஎஸ் குமுறல்!!

0
58
#image_title

அதிமுகவின் கொடி மற்றும் சின்னம் பயன்படுத்துவது தொடர்பான வழக்கு! எதுவுமே செய்ய முடியல.. ஓபிஎஸ் குமுறல்!!

கடந்த 2016 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். அவரது மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே பதவி போட்டி ஏற்பட்டு அதிமுக இரு அணிகளாக பிரிந்தது.

அதன் பிறகு இபிஎஸ் அவர்களை முதல்வராக தேர்ந்தெடுத்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றினர். பின்னர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கிடையே இருந்த கருத்து முரண்பாடு நீங்கி இருவரும் இணைந்து அதிமுகவை வழிநடத்தி சென்றனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமானது. ஒற்றை தலைமை இருந்தால் தான் கட்சியை வலுப்படுத்த முடியும் என்ற விவகாரம் உச்சம் பெற்ற நிலையில் கடந்த 2022, ஜூலை 11 அன்று அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்று எடப்பாடியார் அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஓபிஎஸ் அவர்கள் அதிமுகவின் விரோதிகளான டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலா உடன் இணக்கமாக இருந்த காரணத்தினால் அவரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடியார் அதிரடி காட்டினார். அதுமட்டும் இன்றி அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ்க்கு எதிராக எடப்பாடியார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதிமுகவின் பெயர், சின்னம், கொடியை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்துவதால் மக்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. இதனால் தேர்தல் சமயத்தில் பிரச்சனைகளும், குழப்பமும் எழும் என்று கூறி எடப்பாடியார் தொடர்ந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடரப்பட்ட நிலையில் அதன் பின்னர் 2 முறை விசாரணைக்கு வந்த பொழுது பதில் மனு தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்பில் இருந்து 2 முறை கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் நீதிமன்றம் அவருக்கு கால அவகாசம் வழங்கியது.

ஆனால் மீண்டும் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தயராக இருக்கிறோம். குறுகிய கால அவகாசம் வேண்டுமென்று ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதை கேட்ட நீதிபதி இந்த ஒற்றை வழக்கை வைத்துக் கொண்டு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று மாறி மாறி வழக்கு தொடர்ந்து எத்தனை முறை தான் கால அவகாசம் கேட்பீர்கள்? என்று காட்டமாக கூறினார்.

மேலும் அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து, ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதிக்கவில்லை. இதன் காரணமாக அதிமுக பெயர், சின்னம், லெட்டர்பேடு, கொடி போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த கூடாது என்று அதிரடியாக உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல் முறையீடு செய்து இருக்கிறது. அந்த மேல்முறையீட்டு மனுவில் அதிமுகவின் பெயர், சின்னம், கொடியை பயன்படுத்துக் கூடாது என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் தனக்கு பெருத்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையானது நீதிபதி மகாதேவன் மற்றும் முகமது சபீக் முன் இன்று விசாரணைக்கு வந்தது. ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், மனுவை இன்றே விசாரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

எதை கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கை விரைவாக விசாரிக்கும் அளவிற்கு என்ன அவசரம்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அதிமுக பெயர், சின்னம், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டதால் ஓபிஎஸ் அவர்கள் செயல்பட முடியாத நிலையில் உள்ளார் என்று கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கை நாளை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்து நாளை(வியாழனுக்கு) இந்த வழக்கை ஒத்திவைத்தனர்.