Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் “பச்சை மாங்கா பச்சடி” – சுவையாக செய்வது எப்படி?

0
132
#image_title

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் “பச்சை மாங்கா பச்சடி” – சுவையாக செய்வது எப்படி?

பச்சை மாங்கா வைத்து பச்சடி அதுவும் கேரளா ஸ்டைலில் செய்தால் அதிக சுவை மற்றும் மணமுடன் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*பச்சை மாங்காய் – 1

*தயிர் – 300 கிராம்

*தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி

*கடுகு – 1/4 தேக்கரண்டி

*கருவேப்பிலை – 1 கொத்து

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

*வெந்தயத் தூள் – 12 சிட்டிகை அளவு

*பெருங்காயத் தூள் – சிட்டிகை அளவு

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

ஒரு பச்சை மாங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். அவை சூடேறியதும் கடுகு 1/4 தேக்கரண்டி மற்றும் 1 கொத்து கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.

பிறகு சிட்டிகை அளவு பெருங்காயத் தூள் சேர்த்து கொள்ளவும். பின்னர் அடுப்பை அணைத்து 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள். 1 தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து கிளறி விடவும். பின்னர் 2 சிட்டிகை அளவு வெந்தயத் தூள் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து நறுக்கி வைத்துள்ள மாங்காய் துண்டுகளை சேர்த்து கிளறி விடவும். தொடர்ந்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி மீண்டும் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளவும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து மாங்காய் துண்டுகளை வதக்கி கொள்ளவும். மாங்காய் துண்டுகள் வதங்கி வந்ததும் 300 கிராம் அளவு தயிர் ஊற்றி ஒரு கிளறு கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும். பின்னர் நன்கு கிண்டி விட்டால் சூடான சுவையான மாங்காய் பச்சடி தயார்.

Previous articleதினமும் இஞ்சி தேநீர் பருகுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!
Next articleபாட்டி வைத்தியம்.. தீராத நெஞ்சு சளி பாதிப்பை நிமிடத்தில் சரி செய்ய இந்த 2 பொருட்களை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்!!